நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் செப்டம்பர் முதல் ஜனவரி மாத இறுதி வரை நீர் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காலை நேரங்களில் நீர் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.
உதகையின் மையப் பகுதியான தாவரவியல் பூங்கா வெலிங்டன் விளையாட்டு மைதானங்களில் உள்ள புல் தரைகளில் நீர் பனித்துளிகள் படர்ந்து காணப்படுவதால், காலை நேரங்களில் நடைபயிற்சி, ஓட்ட பயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரை வெள்ளப்பாதிப்புக்கு காரணம் என்ன? நீரியல் ஆய்வாளர் சொல்லும் தீர்வு இதுதான்!
இதனால் அப்பகுதி மக்கள் பகல் நேரங்களிலேயே தீமூட்டி குளிரை போக்கிக் கொள்கின்றனர். மேலும் அங்கு நிலவும் கடும் பனி காரணமாக லாம்ஸ் ராக், டால்பின்நோஸ் போன்ற குளிர் வாட்டுவதால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் தங்கும் விடுதியிலேயே முடங்கியுள்ளனர்.
மலைப்பாதைகளில் பனிமூட்டமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளாகி வருகின்றனர். இதனால் தங்கள் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டவாறு ஊர்ந்து செல்வதாகவும் கூறுகின்றனர். முற்பகலுக்குப் பின்னர் படிப்படியாக வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால், நீர் பனி மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்