ETV Bharat / state

ஒரு வாரமாகக் குடிநீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்ட நம்பன்பட்டி கிராமத்தினர்! புதுக்கோட்டையில் பரபரப்பு! - Nambanpatti Water Issue

Nambanpatti people Protest: கடந்த ஒரு வாரக் காலமாக முழுவதுமாக குடிநீர் வரவில்லை என குற்றம் சாட்டி நம்பன்பட்டி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 5, 2024, 5:25 PM IST

ஒரு வாரமாகக் குடிநீர் வராததால் சாலை மறியலில் ஈடுபட்ட நம்பன்பட்டி கிராமத்தினர்! புதுக்கோட்டையில் பரபரப்பு!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட நம்பன்பட்டி கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்குக் கடந்த ஆறு மாத காலமாக முறையான குடிநீர் வழங்கவில்லை எனவும், அதிலும் கடந்த ஒரு வாரக் காலமாக முழுவதுமாக குடிநீர் வரவில்லை என குற்றம் சாட்டி அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையிலான போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில், சற்று நேரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வந்துவிடுவார் உங்கள் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் சாலை மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.

குடிநீர் பிரச்சினைக்காகப் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆலங்குடி- ஆதனக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாகப் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் கலைந்து சென்றதும் போலீசார் போக்குவரத்தைச் சீர் செய்தனர்.

இதையும் படிங்க: புதுக்கோட்டையில் பெண்கள், சிறுமிகளுடன் கோலாட்டம் ஆடி நூதன முறையில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்! - Lok Sabha Election 2024

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.