திருப்பத்தூர்: நாடாளுமன்றத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் மாவட்டம், தேவஸ்தானம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தனியார் வங்கியில் பணியாற்றும் மணிகண்டன் தேவஸ்தானம் பகுதியில் வசிக்கும், முதியோர்களுக்கு, முதியோர் உதவித்தொகை வழங்கிக் கொண்டிருந்த போது, தேர்தல் பறக்கும் படையினர் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதாகக் கருதி மணிகண்டன் வைத்திருந்த ரூ. 1 லட்சத்து 22 ஆயிரத்தைப் பறிமுதல் செய்து, வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி வட்டாட்சியர் அஜிதா பேகம் விசாரணை மேற்கொண்ட போது, தனியார் வங்கி ஊழியர்கள் உரிய ஆவணங்கள் சமர்ப்பித்தனர். அதன்பின், பறிமுதல் செய்த பணத்தை அதிகாரிகள் வங்கி ஊழியர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: தொழிலாளர்களுடன் தொழிலாளராக மூட்டை தூக்கி வாக்கு சேகரித்த நீலகிரி நாதக வேட்பாளர்! - Lok Sabha Election 2024