வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேவூர் பகுதியில், இன்று (பிப்.25) காலை ரயிலில் இருந்து தவறி விழுந்ததாக அப்பகுதி கிராம மக்கள், காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் காட்பாடி ரயில்வே போலீசார் சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட இடத்திற்குச் சென்று விராணை மேற்கொண்டதில், ஒருவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
அவர் இன்று (பிப்.25) காலை ரயிலின் படிக்கட்டில் பயணம் செய்யும்போது தவறி விழுந்து உயிர் இழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல், உயிரிழந்த நபருக்கு சுமார் 55 வயது வரை இருக்கலாம் எனவும், அவர் வடமாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் எனவும் விசாரணை மேற்கொண்டதில் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, உயிரிழந்தவரின் உடலைக் கைப்பற்றிய ரயில்வே போலீசார், உடற்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து காட்பாடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பிரம்மயுகம், மஞ்சுமெல் பாய்ஸ் வரிசையில் மலையாள சினிமாவில் ஆதிக்கம் செலுத்தும் பிரேமலு!