ETV Bharat / state

பைக் மீது லாரி மோதி விபத்து; திருவள்ளூரில் ஒருவர் உயிரிழப்பு! - Thiruvallur accident - THIRUVALLUR ACCIDENT

Thiruvallur accident: திருவள்ளூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், ஒருவர் பலத்த காயங்களுடன் திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Thiruvallur accident
Thiruvallur accident
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 24, 2024, 8:14 PM IST

திருவள்ளூர்: திருவள்ளூர் டோல்கேட் பகுதியைச் சேர்ந்தவர் குப்புராஜ். இவரது நண்பர் முகமது அன்சாரி. இருவரும் இன்று (புதன்கிழமை) பொன்னேரியில் நடைபெற்ற திருமணத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு வீட்டுக்குth திரும்பியுள்ளனர்.

அப்போது, ஈக்காடு விசுவாசபுரம் பகுதி அருகே, திருவள்ளூர் செங்குன்றம் சாலையில் இருந்த வளைவில் திரும்பிய போது, பின்னால் வந்து கொண்டிருந்த லாரி குப்புராஜ் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதி உள்ளது. இதில், இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், பின்னால் அமர்ந்திருந்த முகமது அன்சாரி மீது லாரி ஏரி இறங்கியதில், அவரது தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே முகமது அன்சாரி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த குப்புராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

மேலும், புள்ளரம்பாக்கம் காவல் நிலையப் போலீசார் முகமது அன்சாரியின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்க்காக திருவள்ளுர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், அதிக வேகத்துடன் வந்த லாரி முன்னாள் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதனாலேயே இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாகவும், அதிவேகமாக லாரியை இயக்கிய ஓட்டுநரை உடனடியாக கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: துவரங்குறிச்சி அருகே கார் கவிழ்ந்து விபத்து; அரசு ஊழியர் உள்பட மூவர் உயிரிழப்பு! - Car Accident At Trichy

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.