ETV Bharat / state

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: மேலும் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு 1000 ரூபாய்! - Kalaignar magalir urimai thogai

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 15, 2024, 8:05 PM IST

Kalaignar magalir urimai thogai: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்த ஒரு லட்சத்து 48 ஆயிரம் பயனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கோப்புபடம்
மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கோப்புபடம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும், தமிழ்நாடு அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் ஏற்கனவே உள்ள சுமார் ஒரு கோடியே 15 லட்சம் பயனாளர்களுடன் புதிதாக இணைக்கப்பட்ட ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேருக்கும் சேர்த்து இன்று (ஜூலை 15) உரிமைத் தொகை வழங்கப்பட்டது.

கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு கடந்த ஆண்டு அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. முதலில் ஒரு கோடி பேர் என இலக்கு நிர்ணயித்தாலும், அரசு அறிவித்த பொருளாதாரத் தகுதிகளுக்குள் வரும் அனைவரையும் பயனாளர்களாக இணைக்க முடிவெடுக்கப்பட்டது.

முதலில் ஒரு கோடியே 6 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே பயனாளர்களாக இருந்த நிலையில் அடுத்தடுத்து விண்ணப்பித்தவர்களும் பயனாளர்களாக இணைக்கப்பட்டு வருகின்றனர். நிராகரிக்கப்பட்டவர்களும் மேல்முறையீடு செய்ய வழிவகைகள் செய்யப்பட்டன. அடுத்தடுத்த மாதங்களில் பலரும் இணைக்கப்பட்டதால் பயனாளர்கள் எண்ணிக்கை 1 கோடியே 15 லட்சம் ஆனது.

அதைத் தொடர்ந்தும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுவதால் இன்று முதல், மேலும் 1 லட்சத்து 48 ஆயிரம் பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மகளிர் உரிமைத் திட்டத்திற்கென 2023 - 2024ம் நிதியாண்டில் 8 ஆயிரத்து 123.83 கோடி ரூபாயும், 2024-25ம் நிதியாண்டிற்கென 13 ஆயிரத்து 722.47 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: முதுகலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கையால் அரசு மருத்துவர்களுக்கு பாதிப்பா? அமைச்சர் சொல்வது இதுதான்! - pg medical admission

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.