ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த நாள்; கோயம்பேட்டில் காய்கறி, பழங்கள், பூக்கள் விலை கிடுகிடு உயர்வு..! - koyambedu market price today

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 7, 2024, 4:20 PM IST

koyambedu wholesale vegetable price today: விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாளை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பூக்கள், காய்கறிகள், பழங்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

கோயம்பேடு சந்தையில் குவிக்கப்பட்டுள்ள பூக்கள்
கோயம்பேடு சந்தையில் குவிக்கப்பட்டுள்ள பூக்கள் (credit - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கோயம்பேடு வணிக வளாகத்தில் பூ மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் வருகின்றது. இதில் குறிப்பாக ஆந்திர மாநிலம், கர்நாடக மாநிலம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, ஓசூர், மதுரை, திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக வருகிறது.

இந்நிலையில், விநாயகர் சதுர்த்தி மற்றும் முகூர்த்த நாள் தினத்தில் பூக்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. இதில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் மல்லி 900 ரூபாய், ஜாதி மல்லி 400 ரூபாய், ஐஸ் மல்லி 600 ரூபாய், கனகாம்பரம் 1500 ரூபாய், பன்னீர் ரோஸ் 1000 ரூபாய், சாக்லேட் ரோஸ் 230 ரூபாய், சாமந்தி 240 ரூபாய், சம்பங்கி 450 ரூபாய், அரளி 200 ரூபாய், தாமரை பூ ஒன்று 20 ரூபாய், கோழி கொண்டை 100 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்தது.

பூக்களின் விலை: முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில், மல்லி 1200 ரூபாய்க்கும், ஜாதிமல்லி 1000 ரூபாய்க்கும், ஐஸ் மல்லி 600 ரூபாய்க்கும், கனகாம்பரம் பூ 1500 ரூபாய்க்கும், பன்னீர் ரோஸ் 180 ரூபாய்க்கும், சாக்லேட் ரோஸ் 300 ரூபாய்க்கும், சாமந்தி 240 ரூபாய்க்கும், சம்பங்கி 300 ரூபாய்க்கும், அரளி 250 ரூபாய்க்கும், தாமரைப்பூ ஒன்று 30 ரூபாய்க்கும், கோழி கொண்டை பூ 120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காய்கறி விலை: அதே போல் காய்கறி விலையும் கணிசமாக உயர்ந்து இருக்கிறது வெங்காயம் 60/50/45, தக்காளி 30/25/15, உருளை 45/35/30, சின்ன வெங்காயம் 80/70/50, ஊட்டி கேரட் 90/80/60, கர்நாடக கேரட் 50/35, பீன்ஸ் 70/60/50, ஊட்டி பீட்ரூட் 40/35, கர்நாடக பீட்ரூட் 15/13, சவ் சவ் 25/18, முள்ளங்கி 15/13, முட்டை கோஸ் 15/10, வெண்டைக்காய் 20/10, உஜாலா கத்திரிக்காய் 30/20, வரி கத்திரி 25/20, காராமணி 60/40, பாவக்காய் 35/30, புடலங்காய் 25/20, சுரக்காய் 15/10, சேனைக்கிழங்கு 65/60, முருங்கைக்காய் 25/15, சேம கிழங்கு 40/30, காலிபிளவர் 20/95, வெள்ளரிக்காய் 20/15, பச்சை மிளகாய் 25/20, பட்டாணி 150/120, இஞ்சி 140/135/120, பூண்டு 350/250/160, அவரைக்காய் 70/50, மஞ்சள் பூசணி 25/20, வெள்ளை பூசணி 20, பீர்க்கங்காய் 35/30, எலுமிச்சை 140/130, நூக்கள் 25/20, கோவைக் காய் 20/15, கொத்தவரங்காய் 35/30, வாழைக்காய் 8/6, வாழை தண்டு 30/25, வாழைப்பூ 30/25, குடை மிளகாய் 35/30, வண்ண குடமிளகாய் 80, கொத்தமல்லி 10, புதினா 6, கருவேப்பிலை 25, கீரை வகைகள் 8, மாங்காய் 180/60, தேங்காய் 36/35 என விற்பனையாகிறது.

பழங்களின் விலை: காய்கறி விலையை தொடர்ந்து பழங்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதில் ஆப்பிள் 140 ரூபாயிலிருந்து 150 ரூபாய்க்கும், ஆரஞ்சு 60 ரூபாயிலிருந்து 80 ரூபாய்க்கும், விளாங்காய் 70 ரூபாய் இருந்து 90 ரூபாய்க்கும், பேரிக்காய் 100 ரூபாயிலிருந்து 120 ரூபாய்க்கும், சாத்துக்குடி 70 ரூபாயிலிருந்து 90 ரூபாய்க்கும், மாதுளை 150 ரூபாயிலிருந்து 190 ரூபாய்க்கும், வாழை 70 ரூபாயிலிருந்து 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: "சென்னை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு"- வானிலை மையம் எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.