ETV Bharat / state

''காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உயிரிழப்பில் எந்த ஒரு சமாதானமும் கிடையாது'' - செல்வப்பெருந்தகை பேச்சு! - Nellai Congress Leader Jayakumar - NELLAI CONGRESS LEADER JAYAKUMAR

Selvaperunthagai about Jayakumar death: ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும், எந்த ஒரு சமாதானமும் கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமார் மற்றும் செல்வப்பெருந்தகை புகைப்படம்
ஜெயக்குமார் மற்றும் செல்வப்பெருந்தகை புகைப்படம் (Credits to Etvbharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 4, 2024, 7:14 PM IST

ஜெயக்குமார் உயிரிழப்பு குறித்து செல்வப்பெருந்தகை பேச்சு (Credits to Etvbharat Tamil Nadu)

சென்னை: காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் உயிரிழந்த விவகாரத்தில், அண்ணாமலை தலையிடுவதற்கு என்ன வேலை என சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று (மே.04) செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

அப்போது பேசிய அவர், “தென் மாவட்டத்தில் வலிமையான மாவட்ட தலைவரை நாங்கள் இழந்துள்ளோம். காவல்துறை விசாரணை நேர்மையாக நடந்து கொண்டிருக்கிறது. எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல், எங்களது மாவட்ட தலைவர் ஜெயக்குமார் குடும்பத்தினரின் புகாரை ஏற்று நேர்மையான முறையில் விசாரணை செய்ய வேண்டும்.

அதேபோல், மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்யும் போதும் வீடியோ பதிவுகள் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் தவறு செய்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும். கட்சி ரீதியாகவும் நாங்கள் விசாரணை மேற்கொண்டுள்ளோம். ஜெயக்குமார் இறப்பில் எந்த ஒரு சமாதானமும் கிடையாது” என்றார்.

தொடர்ந்து, காங்கிரஸ் மாவட்ட தலைவருக்கே திமுக ஆட்சியில் இது தான் நிலைமை என்ற தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்திற்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, “அண்ணாமலை இந்த விவகாரத்தில் தலையிடுவதற்கு என்ன வேலை? ஒரு இழப்பை கொச்சைப்படுத்தி அரசியலாக்க கூடாது” என தெரிவித்தார். தொடர்ந்து நாளை நெல்லை செல்ல உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பாதி எரிந்த நிலையில் கிடந்த காங்., நிர்வாகி ஜெயக்குமார் சடலம்.. பரபரப்பை கிளப்பும் புகார் கடிதம்.. நெல்லையில் நடந்தது என்ன? - Nellai Congress Leader Jayakumar

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.