கோவை: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதி முன்னாள் பாஜக உறுப்பினர் மாஸ்டர் மதன்( வயது 92) வயதுமூப்பு காரணமாக காலமானார். 1998 - 2004 வரை நீலகிரி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாஸ்டர் மதன், கோவை மேட்டுப்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனி பகுதியில் வசித்து வந்த நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு காலமானார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மாஸ்டர் மதன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவர் தமது சமூக சேவை முயற்சிகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்ததற்காகவும் என்றென்றும் நினைவுகூறப்படுவார். தமிழகத்தில் எங்கள் கட்சியை வலுப்படுத்தவும் அவர் அரும்பாடு பட்டார். அவரது…
— Narendra Modi (@narendramodi) July 27, 2024
மாஸ்டர் மதன் மறைவுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் பதிவில், "முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு மாஸ்டர் மதன் அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவர் தமது சமூக சேவை முயற்சிகளுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்ததற்காகவும் என்றென்றும் நினைவுகூறப்படுவார். தமிழகத்தில் எங்கள் கட்சியை வலுப்படுத்தவும் அவர் அரும்பாடு பட்டார். அவரது குடும்பத்தினருக்கும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், நீலகிரி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான, மதிப்புக்குரிய திரு. மாஸ்டர் மாதன் அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
— K.Annamalai (@annamalai_k) July 27, 2024
தமிழகத்தில், கட்சி வளர்ச்சிக்கும், நீலகிரி மக்களின் முன்னேற்றத்திற்கும் அரும்பாடு பட்டவர். கடின… pic.twitter.com/2cv0CcfUno
பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.