ETV Bharat / state

“மன்மோகன் சிங் எந்த தேர்தலில் நின்று பிரதமராக இருந்தார்?” - நாராயணன் திருப்பதி கேள்வி! - BJP vs DMK - BJP VS DMK

Narayanan Thirupathy allegations to DMK: காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில துணைத் தலைவரும், மாநில செய்தி தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி, மது, கஞ்சாவால் தமிழ்நாடு கொலைகார மாநிலமாக மாறி விட்டது எனவும், இதனைத் தடுக்க தமிழக முதலமைச்சர் தவறிவிட்டார் எனவும் குற்றம்சாட்டினார்.

நாராயணன் திருப்பதி
நாராயணன் திருப்பதி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 4, 2024, 1:50 PM IST

சிவகங்கை: மத்திய அரசு வெளியிட்ட பட்ஜெட் தொடர்பாக, காரைக்குடியில் பாஜக மாநில துணைத் தலைவரும், பாஜக மாநில செய்தித் தொடர்பாளருமான நாராயணன் திருப்பதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தற்போதைய மத்திய பட்ஜெட் மூலம் பல நலத்திட்டங்களை நாம் தொடர்கிறோம். மகளிர் மேம்பாடு, தொழில் முனைவோர், தொழில் புரிவோருக்கு பல புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளது. கிராம மக்கள் மேம்பாடு, ரயில்வே திட்டங்களுக்கு அற்புதமான திட்டங்கள் என நாட்டு மக்களோடு இணைந்து செயல்படுத்துவதற்கான திட்டங்களை மத்திய அரசு செய்துள்ளது.

நாராயணன் திருப்பதி பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

தமிழகத்தில் பெருகி வரும் குற்றச் செயல்கள்: கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு மாநிலம் கொலைகார மாநிலமாக மாறிவிட்டது. இதனைத் தடுக்க தமிழ்நாடு காவல்துறை மற்றும் தமிழக முதலமைச்சர் தவறிவிட்டார். அதற்கு முழுக்காரணம் மது, கஞ்சா போன்றவற்றின் புழக்கம் அதிகமாக இருப்பதுதான். கொலை போன்ற குற்றச் சம்பவங்களில் கைது செய்யப்பட்ட அனைவரது முதல்நிலை அறிக்கையில் போதையினால் தான் குற்றம் நிகழ்ந்துள்ளது என உள்ளது. இந்த அரசால் இதைக்கூட அடக்க முடியவில்லை. தமிழ்நாட்டில் குற்றச் செயல்கள் பெருகி வருகிறது. சட்டம் ஒழுங்கை காப்பாற்ற முடியவில்லை என்றால், அரசை விட்டு வெளியேறுங்கள்.

அதிகார அத்துமீறல்: காரைக்குடி நகராட்சித் தலைவர் தன்னை சமீப காலமாக மேயர் என அழைத்துக் கொண்டு பிரச்னையை கிளப்பி வருகிறார். மாநகராட்சி என்று அறிவிக்கப்பட்டு முழு செயல்பாட்டுக்கு வராதவரை மேயர் என்று எப்படி கூறலாம்? போலியாக மேயர் என்று அழைத்துக் கொண்டு செயல்படுகிறார். அவருக்கு அமைச்சரும் உடந்தையாக உள்ளார். காரைக்குடியில் தமிழக அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் கட்டடத்தின் மேற்புறம் நகராட்சி என்றும், கீழ்ப்பகுதியில் மாநகராட்சி என்றும் கூறப்பட்டுள்ளது. இது அதிகார அத்துமீறல்.

அதற்கு இந்த மாவட்டத்தின் ஆட்சியாளர்கள் உடந்தையாக உள்ளனர். மற்ற எந்த நகராட்சியிலும் இதுபோன்ற அத்துமீறல் இல்லை. எனவே, மேயர் என கூறிக்கொள்ளும் நகராட்சித் தலைவர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தான் முழுப்பொறுப்பு. பட்ஜெட்டில் என்ன முதலீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டிற்கு தேவையான விஷயங்கள் என்ன என்பது குறித்து இங்குள்ள எம்.பிக்கள் அமர்ந்து பேசி, அந்த திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர பரிந்துரைக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் கடத்தல் என்பது நிர்வாக சீர்கேடு. காவல்துறை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசின் வளர்ச்சியோடு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். மத்திய அரசின் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்துவது தான் கூட்டாட்சி தத்துவம். மத்திய மின்தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்கு மின்சாரம் வழங்குவதால்தான் இங்கு மின்தடை இல்லை. மாற்று எரிசக்தி மின்சாரத்தில் உலகிலேயே இந்தியா முன்னேறி உள்ளது.

பாஜக சாதனையால்தான் 3வது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளோம். சாதி, மொழி ரீதியாக மக்களைப் பிரிக்க வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறார் ராகுல்காந்தி. நாட்டை பிளக்க துடித்துக் கொண்டிருக்கிறார். நிர்மலா சீதாராமன் நேரடியாக போட்டியிடவில்லை என்று கூறும் கார்த்தி சிதம்பரம், மன்மோகன்சிங் எந்த தேர்தலில் நின்று பிரதமராக இருந்தார் என்று கூற வேண்டும். அதனால்தான் இந்த பிரச்னையை முன் வைத்துள்ளார்.

2026-ல் தமிழ்நாட்டில் ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். நிதி ஆயோக் கூட்டத்தை தமிழக அரசு புறக்கணிப்பது தமிழக வளர்ச்சியை புறக்கணிப்பதாகும். நீட் தேர்வில் மனிதத்தவறு நடந்துள்ளது. அதை சரிசெய்ய வேண்டும். அதைவிட்டு விட்டு ரத்து செய்வது முறையாகாது. தமிழகத்தில் இதற்கு முன்பு நடந்த பிளஸ் 2 தேர்வில் இது போன்று தவறுகள் நடந்துள்ளது. அதற்காக தமிழ்நாடு முழுவதும் தேர்வை ரத்து செய்யவில்லை?" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: “அது திரிக்கப்பட்ட தரவு தான்”.. 10.5% இடஒதுக்கீடு RTI விவரத்திற்கு ராமதாஸ் கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.