ETV Bharat / state

இந்தியா மூன்றாவது பொருளாதார நாடாக வளர்ந்து வருகிறது.. தேசிய கல்வி தொழில்நுட்ப குழுமத் தலைவர் பெருமிதம் - VIT Vellore - VIT VELLORE

VIT vellore convocation 2024: விஐடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய தேசிய கல்வி தொழில் நுட்ப குழுமத் தலைவர் பேராசிரியர் அனில் டி.சகஸ்ர புதே, இந்தியா தற்போது மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வருவதாக தெரிவித்தார்.

விஐடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
விஐடி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 2, 2024, 6:25 PM IST

வேலூர்: வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 39வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தேசிய கல்வி தொழில்நுட்ப குழுமத் தலைவர் பேராசிரியர் அனில் டி.சகஸ்ர புதே மற்றும் கர்நாடக மாநில வளர்ச்சி கவுன்சில் தலைவர் டி.ஆர்.பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினர்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய தேசிய கல்வி தொழில்நுட்ப குழுமத் தலைவர் பேராசிரியர் அனில் டி.சகஸ்ர புதே கூறியதாவது, "கணினி அறிவியல் வளர்ச்சியின் காரணமாக இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவுத் திறன் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறதாகத் தெரிவித்தார். மாணவர்களுக்கு சரியான அணுகுமுறை இல்லாவிட்டால் எதையும் சாதிக்க முடியாது என்றும், மாணவர்களுக்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம் என்பதையும் அறிவுறுத்தினார்.

இந்தியா தற்போது மூன்றாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வருகிறது என்றும், 2014ஆம் ஆண்டு 400 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கூட இந்தியாவில் இல்லை என்றும், தற்போது இந்தியாவில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மாணவர்கள் குறிப்பாக, நேரத்தைக் கடைப்பிடித்தல் மற்றும் திறன், பயிற்சி இவை இரண்டையும் கடைபிடித்தால் மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வரலாம் எனக் கூறினார்.

சக்தி வாய்ந்த மருத்துவமாக யோகா பயிற்சி விளங்குவதாகவும், யோகா பயிற்சிகளை மாணவர்கள் மேற்கொண்டால் நல்ல ஞாபக சக்தியும், அறிவாற்றலும் பெருகும் எனவும், நல்ல உடல் ஆரோக்கியம் கிடைக்கும் எனவும் அறிவுரை வழங்கினார். நாட்டில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளது என்றும், சர்வதேச கல்வி சம்பந்தமான போட்டிகளில் பங்கேற்று மாணவர்கள் வெற்றி பெற வேண்டும் என்றும், அப்போது தான் மாணவர்களின் திறன் மேம்படும் எனத் தெரிவித்தார்.

அறிவியல் வளர்ச்சியின் காரணமாகக் கதையாகச் சொல்லப்பட்ட சம்பவம் இன்று நினைவாகி இருப்பதாகவும், இன்றைய விஞ்ஞான உலகில் மாணவர்கள் தங்கள் திறனை வளர்த்துக் கொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயல்பட்டால் வாழ்க்கையில் பல பதவிகளைப் பெறலாம்" என்று கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: "வாத்தியார் அடிச்சா குத்தமில்லை"- கேரள நீதிமன்றம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.