ETV Bharat / state

"கட்சிக்காரர் போல் நடக்காமல் நடுநிலையாக நடக்க வேண்டும்" - ஆளுநருக்கு அட்வைஸ் செய்த எம்.பி கனிமொழி - MP Kanimozhi Slams RN ravi - MP KANIMOZHI SLAMS RN RAVI

MP Kanimozhi: ஆளுநர் ஆர்.என்.ரவி உடனான தேநீர் விருந்தை திமுக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தது குறித்து விளக்கமளித்த எம்.பி கனிமொழி, ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவர் ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் அப்படிதான் அறிவிப்பார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரவி, எம்.பி கனிமொழி
ஆளுநர் ரவி, எம்.பி கனிமொழி (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 15, 2024, 7:45 AM IST

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டம் பெற்ற 10 திருநங்கைகள் உட்பட 18 பேருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணை பொது செயலாளருமான கனிமொழி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார்.

விழா மேடையில் பேசிய எம்.பி கனிமொழி, "இந்த பயணம் என்பது பல விஷயங்களை சொல்லி கொடுக்க கூடிய ஒன்று. ஒரு காலத்தில் திருநங்கைகள் ஒரு பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்றாலும் வாங்க முடியாது. கல்லூரியில் சேர முடியாது. திருநங்கைகள் இருக்கிறார்கள் என்று எந்த அடையாளமும் இருக்காது. இந்த சமூகம் அவர்கள் மீது காட்டிய வேறு விதமான பார்வை தான் அதிகளவில் திருநங்கைகளை ஆபரேஷன் செய்ய வைத்தது.

திருநங்கைகள் கல்லூரிகளுக்கு செல்ல விரும்பினால் நீங்கள் ஆணா? பெண்ணா? என்று கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் அங்கேயே அவர்களது வாழ்க்கை முற்றுப்புள்ளியோடு நின்ற சூழல் இருந்தது. வாழ்வதற்கே, போராடிக் கொண்டிருப்பவர்கள் திருநங்கைகள். திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "பெரியார் வழியில் வந்த இந்த ஆட்சி இன்று வரை அதை செய்து கொண்டிருக்கிறது. இந்தக் கல்வி உங்கள் மீது ஒரு நம்பிக்கையை தரும். எங்களால் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கக்கூடியது கல்வி. நீங்கள் பல பேருக்கு முன்னுதாரணமாக மாற முடியும். இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் முன் உதாரணமாக இருப்பவர்கள் திருநங்கைகள் தான்" என்று கூறினார்.

திருநங்கைக்கு பட்டம் வழங்கிய கனிமொழி
திருநங்கைக்கு பட்டம் வழங்கிய கனிமொழி (Credits - ETV Bharat Tamil Nadu)

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, "2008ஆம் ஆண்டு முதல் முதலாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் திருநங்கைகளின் எதிர்காலத்திற்காக ஒரு அங்கீகாரத்தை கொடுத்தார். இந்த நாட்டிலேயே திருநங்கைகளை முதன்முதலாக அங்கீகரித்த மாநிலம் தமிழ்நாடு. சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருநங்கைகள் மேலே படிப்பதற்கு தடை வந்துவிடக் கூடாது என்பதற்காக அவர்களுக்கான படிப்பு மற்றும் விடுதி செலவை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்து உள்ளார்.

ஆளுநருக்கு அட்வைஸ்: தேநீர் விருந்து புறக்கணிப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் அப்படிதான் அறிவிப்பார்கள் என்றார். சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர். என்.ரவி இன்று தேநீர் விருந்து அளிக்கிறார். அதை காங்கிரஸ், திமுக, மதிமுக, விசிக கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உதயநிதி துணை முதலமைச்சர் என்ற அறிவிப்பை வெளியிடக்கூடிய ஒரே ஒரு நபர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். அதை அவர் தான் முடிவு செய்வார். பாஜக தமிழகத்தில் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதிமுக பிரச்சினையை அவர்கள் தான் சரி செய்து கொள்ள முடியும். அதற்கு திமுக அதற்கு அறிவுரை வழங்க முடியாது" என்று கூறினார்.

Join ETV Bharat WhatsApp channel Click here
Join ETV Bharat WhatsApp channel Click here (ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: "பிரிவினையை ஆதரிக்கும் சித்தாந்தங்களுள் திராவிடமும் ஒன்று" - ஆளுநர் ஆர்.என்.ரவி சாடல்! - R N Ravi Accused Dravidian Ideology

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.