ETV Bharat / state

மகளின் கர்ப்பத்துக்கு தந்தை காரணம் என பொய் வழக்கு போட்ட தாய்க்கு 5 ஆண்டு சிறை தண்டனை!

POCSO Court: மகளின் கர்ப்பத்துக்கு தந்தை காரணம் என்று தாய் அளித்த பொய் வழக்கில், தாய்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

போக்சோ சிறப்பு நீதிமன்றம்
போக்சோ வழக்கு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 8, 2024, 11:31 AM IST

சென்னை: கணவரை பழிவாங்குவதற்காக, மகளின் கர்ப்பத்துக்கு தந்தை காரணம் என்று, தாய் போலி ஆவணங்களை உருவாக்கி அளித்த பொய் வழக்கு விவகாரத்தில், தாய்க்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்தும் சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பாக, தனது மகளின் கர்ப்பத்திற்கு, அவரது தந்தை காரணம் என்று காவல் நிலையத்தில், தாய் புகார் அளித்துள்ளார். புகார் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட தந்தைக்கு எதிரான விசாரணை, போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதற்கிடையில், தன் மீதான பாலியல் வழக்கில், முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று தந்தை தரப்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிறுமியின் தாய் அளித்த மருத்துவமனை சிறுநீர் அறிக்கை மற்றும் மருத்துவரின் அறிக்கைகள் தவறானவை என்றும், தாய் செவிலியராக பணியாற்றிய மையத்தில் போலியாக சான்றிதழ்களை உருவாக்கியதும் தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து, மகளின் வாக்குமூலத்தை கேமரா மூலம் பதிவு செய்ததுடன், கணவரை பழிவாங்குவதற்காக, தனது மகளின் கர்ப்பத்துக்கு தந்தை காரணம் என்று ஆவணங்களை போலியாக உருவாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, தாய் மீது நடவடிக்கை எடுக்க, உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, "கணவரை பழிவாங்கும் நோக்கத்தில், போலியாக பொய் வழக்கு மற்றும் போலி மருத்துவ ஆவணங்களை தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றத்திற்காக சிறுமியின் தாய்க்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம்" விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க: கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.