ETV Bharat / state

திருமுல்லைவாயல் காவல் நிலையம் முன்பு தாய் தற்கொலைக்கு முயற்சி.. காரணம் என்ன? - suicide attempt at Thirumullaivoyal - SUICIDE ATTEMPT AT THIRUMULLAIVOYAL

Mother suicide attempt: பொய் வழக்கு போட்டு மகனை கைது செய்ததாகக் கூறி, திருமுல்லைவாயல் காவல் நிலையம் முன்பு தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 7, 2024, 3:52 PM IST

சென்னை: திருமுல்லைவாயல், நாகம்மை நகர் பகுதியில், கடந்த 3 நாட்களுக்கு முன் ஒரே ஊரைச் சேர்ந்த இளைஞர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் இருதரப்பு இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஒரு தரப்பைச் சேர்ந்த இளைஞர்கள், இந்த தாக்குதல் குறித்து தங்களது நண்பர்களிடம் கூறியுள்ளனர். இந்நிலையில், துக்க நிகழ்வின் போது தாக்குதலுக்கு ஆளான நண்பர்கள், தங்களது நண்பனை தாக்கிய இளைஞரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், நண்பர்கள் 5 ககும் மேற்பட்டோர், அந்த இளைஞரைக் கைகளாலும், கற்களாலும் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளைஞர் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆன்லைன் மூலம் சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை ஏற்ற போலீசார், தகராறில் ஈடுபட்டதாக 5 இளைஞர்களை கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவரது பெற்றோர் தனது மகனுக்கும், இந்த பிரச்னைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை எனவும், பொய் வழக்கில் கைது செய்து அழைத்து வந்ததாகவும் கூறி, அவரை விடுவிக்கும்படி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இருப்பினும், போலீசார் அதனை ஏற்காமல் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான இளைஞரின் தாய் ராஜேஸ்வரி, திருமுல்லைவாயல் காவல் நிலைய போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து, வாசலில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த அவர், திடீரென தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்நிலையில், அங்கிருந்த போலீசார் ஓடி வந்து, தற்கொலை முயற்சியை தடுத்து, அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் 5வது நாளாக சிறுத்தையை தேடும் பணி தீவிரம்.. வனத்துறையினரின் அடுத்தகட்ட நடவடிக்கை! - Leopard Movement In Mayiladuthurai

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.