ETV Bharat / state

உடல் கருகிய நிலையில் தாய் - மகன் மீட்பு.. தி.நகர் வீட்டில் நடந்தது கொலையா? தற்கொலையா? - Mother son died in T Nagar - MOTHER SON DIED IN T NAGAR

T Nagar Died: சென்னை தி.நகரில் எரிந்து உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்ட தாய், மகன் குறித்து மாம்பலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேதமான வீடு
சேதமான வீடு (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 23, 2024, 10:14 PM IST

சென்னை: சென்னை தி.நகர் கோபால் தெருவில் உள்ள குடியிருப்பில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவரது மனைவி ராஜலஷ்மி, மகன் கிஷோர் குமார். இவர்கள் அந்த வீட்டில் கடந்த நான்கு வருடமாக வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். ராமகிருஷ்ணன் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று மதியம் ராஜலட்சுமி மற்றும் அவரது மகன் கிஷோர் குமார் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அவர்கள் வீட்டினுள் ஏதோ பயங்கர சத்தத்துடன் வெடிப்பது போன்ற சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது வீட்டின் படுக்கை அறையில் ராஜேஸ்வரியும், அவரது மகன் கிஷோர் குமாரும் உடல் கருகிய நிலையில் உயிரிழந்த நிலையில் இருந்து உள்ளனர். மேலும், வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்துள்ளது. இதனால் உடனடியாக தி.நகர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலின் அடிப்படையில், தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டினுள் எரிந்துகொண்டு இருந்த தீயை அணைத்து உள்ளனர். மேலும், வீட்டில் இருந்த இரண்டு சிலிண்டர்களில் ஒன்று காலியாக இருந்துள்ளது, மற்றொன்று எரியாமல் வீட்டை விட்டு வெளியே எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் வீட்டில் உள்ள சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

மேலும், இது குறித்து தகவல் அறிந்த மாம்பலம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, இருவர் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது தொடர்பான விசாரணையில், அவர்கள் இறந்திருந்த அறையில் ஏசி உள்ளிட்ட மின் சாதனப் பொருட்களிலிருந்து மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதற்கான தடயங்கள் எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.

அதேநேரம், அவர்களின் வீட்டின் கதவு உள்பக்கம் தாழிட்டிருந்ததால் தற்கொலை செய்து கொண்டனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடந்த ஒரு வருடமாக ராஜலட்சுமி, கிஷோர் குமாருக்கு வேலை எதுவும் கிடைக்காமல் மன விரக்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அம்பத்தூர் நீதிமன்றம் எதிரே உள்ள பாழடைந்த தொழிற்சாலையில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.