சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை, கடந்த மார்ச் 1ஆம் தேதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு சேர்க்கை உத்தரவுகளை வழங்கி துவக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அரசு தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 2024 - 2025ஆம் கல்வியாண்டில் 5 வயது பூர்த்தியடைந்த குழந்தைகள் அனைவரையும் கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 6) வரை சேலம் மாவட்டத்தில் 4,236 மாணவர்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 4,057 மாணவர்களும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3,543 மாணவர்களும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 3,096 மாணவர்களும், திருச்சி மாவட்டத்தில் 1,959 மாணவர்களும், திருப்பூர் மாவட்டத்தில் 1,413 மாணவர்களும், நாமக்கல் மாவட்டத்தில் 1,296 மாணவர்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,092 மாணவர்கள், மதுரையில் 1,001 மாணவர்கள் என சேர்க்கை நடைபெற்றுள்ளது. மிகவும் குறைவாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் 93 மாணவர்களைச் சேர்த்துள்ளனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி சிறுமி கொலை; கமல்ஹாசனின் கருத்தை விமர்சித்த இயக்குநர் லெனின் பாரதி!