ETV Bharat / state

"நீட் மோசடிக்கு ஒரு நாள் முடிவுகட்டுவோம்" - மு.க.ஸ்டாலின் உறுதி! - MK Stalin about NEET Scam - MK STALIN ABOUT NEET SCAM

M.K.Stalin about NEET Exam : யாராலும் திருட முடியாத ஒரே சொத்து கல்வி. ஆனால், அதிலும் கூட மோசடிகள் செய்வதை 'நீட்' மூலம் பார்க்கிறோம் எனவும், இந்த மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவுகட்டுவோம், அது எங்கள் பொறுப்பு எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

MK Stalin
முக ஸ்டாலின் (Credits - ETV Bharat)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 14, 2024, 2:53 PM IST

சென்னை: சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், "ஐம்பெரும் விழா" நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசுப் பள்ளிகளில் 22,931 ஸ்மார்ட் வகுப்பறைகளையும், தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு டேப் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து, பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் நூறு மதிப்பெண் எடுத்த மாணவர்கள் 43 பேருக்கும், பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற 1,761 அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும், 67-வது தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற 409 மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மா.சுப்பிரமணியன் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனையடுத்து, விழாவில் பேசிய மு.க.ஸ்டாலின், "பள்ளிக்கல்வித் துறை நிகழ்ச்சிகளில் பொதுவாகவே நான் ஆர்வத்துடன் கலந்துகொள்வது வழக்கம். ஆனால், என்னை விட அதிகமாக கலந்துகொள்ளும் ஒருவர் இருக்கிறார். இந்த மேடையில் இருக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி. அதனால், இந்த முறை நான் முன்பே, ரிசர்வ் செய்துவிட்டேன். பள்ளி மாணவர்களான உங்களை பார்க்கும்போது, எனக்கும் இளமை திரும்பி ஆற்றல் வந்துவிடுகிறது.

பொதுவாக, அரசியல் மேடைகளில்தான் ஐம்பெரும் விழாக்கள், முப்பெரும் விழாக்களை நடத்துவோம். ஆனால், இப்போது பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் ஐம்பெரும் விழா ஏற்பாடு செய்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

ஆகஸ்ட் முதல் தமிழ்ப்புதல்வன் திட்டம்: 'புதுமைப்பெண்' திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதா மாதம் ரூ.1,000 ஆயிரம் வழங்குவதால், அவர்கள் சிறிய சிறிய தேவைகளுக்கு யாரையும் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை இல்லை என்றும், இந்த திட்டம் தங்களின் தேவைக்கு மிகவும் உதவியாக இருப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். அந்த மகிழ்ச்சியை மாணவர்கள் முகத்திலும் பார்க்க வேண்டும் என்பதற்காக மாதம் ரூ.1,000 வழங்குகின்ற "தமிழ்ப்புதல்வன் திட்டம்" செயல்படுத்தப்படும் என்று சொல்லியிருந்தேன். அதன்படி, வருகின்ற ஆகஸ்ட் மாதத்திலிருந்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

எந்த பாடத்தில் 100 மதிப்பெண் எடுத்தாலும் பாராட்டுக்குரியதுதான். ஆனால், நம்முடைய தாய்மொழி தமிழ். அதுவும், உயர்தனிச் செம்மொழி என்பதால், அதில் 100 மதிப்பெண் பெற்றவர்கள் சிறப்பான பாராட்டுக்குரியவர்கள். தற்போது, 12ம் வகுப்பில் 35 பேரும், 10ம் வகுப்பில் 8 பேரும், தமிழ்ப்பாடத்தில் நூற்றுக்கு நூறு பெற்றிருக்கின்றனர். அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு தேசிய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் போட்டிகளில் கலந்துகொண்டு 95 தங்கப் பதக்கங்களையும், 112 வெள்ளிப் பதக்கங்களையும், 202 வெண்கலப் பதக்கங்களையும் மாணவர்கள் வெற்றுள்ளனர். பதக்கம் பெற்றவர்கள், அடுத்து உலக அளவிலான போட்டிகளில் பங்கேற்கவேண்டும்.

கீப் ரன்னிங், கீப் வின்னிங், கீப் ஷைனிங்: தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் 22 ஆயிரத்து 931 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்பட உள்ளது. வகுப்பறையை குழந்தைகள் மனதிற்குப் பிடித்த இடமாக வண்ணமயமாக மாற்ற, அங்கு ஸ்மார்ட் போர்டு ஒன்றைப் பொருத்தப் போகிறோம். இங்கு இணையதள வசதியும் இருக்கும். முதற்கட்டமாக, 500 ஸ்மார்ட் வகுப்பறைகள் இன்று துவக்கம். இதெல்லாமே உங்களுக்காகத்தான்.

என்னுடைய ஆசையெல்லாம், உலகத்தில் எந்த ஊர் மாணவர்களுக்கும், என்னுடைய தமிழ்நாட்டு மாணவர்கள் சவால் விடுகின்ற அளவிற்கு வளர்ந்து இருக்கவேண்டும். அதுதான் என் கனவு. அதற்காகதான் இந்தத் துறையில் நிறைய திட்டங்களைக் கொண்டு வருகிறோம். நிதி நெருக்கடி எத்தனை இருந்தாலும், கல்வித்துறையில் நிறைய புதுப்புதுத் திட்டங்களை தொடங்குகிறோம் என்றால், உங்களுக்காகத்தான். மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்.

பதிலுக்கு, மாணவர்களான உங்களை நான் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்று தான்.. படியுங்கள்.. படியுங்கள்.. படித்துக்கொண்டே இருக்க வேண்டும். எங்கும் தேங்கி நிற்காமல், முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். உங்கள் கண்முன்னால் "ஃபுல் ஸ்டாப்" தெரியக் கூடாது. 'கமா' தான் தெரியவேண்டும். கீப் ரன்னிங். கீப் வின்னிங். கீப் ஷைனிங்.

நீட் மோசடிக்கு முடிவுகட்டுவோம்: கல்விதான் உங்களிடமிருந்து யாராலும் திருட முடியாத ஒரே சொத்து. ஆனால், அதிலும் கூட மோசடிகள் செய்வதை 'நீட்' (NEET) போன்ற தேர்வு முறைகளில் பார்க்கிறோம். அதனால்தான் அதை கடுமையாக எதிர்த்து வருகிறோம். 'நீட்' போன்ற தேர்வுகள் மோசடியானவை என்று முதன்முதலில் கூறியது தமிழ்நாடுதான். அதை இன்றைக்கு இந்தியாவே சொல்லத் தொடங்கி இருக்கிறது. இந்த மோசடிக்கு நிச்சயம் ஒரு நாள் முடிவுகட்டுவோம். அது எங்கள் பொறுப்பு.

மாணவர்களுக்கு படிக்க சமூகமோ, பொருளாதாரமோ, அரசியல் சூழ்நிலையோ எதுவுமே தடையாக இருக்கக் கூடாது. அதுதான் என் எண்ணம், திராவிட மாடல் ஆட்சியின் கொள்கை. கல்வி எனும் நீரோடை தடங்கல் இல்லாமல் பாய்வதற்கு உங்களுடைய இந்த அரசு முழு ஆதரவுடன் நிற்கும். அதை நீங்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த கவனச் சிதறலும் இல்லாமல் படிக்க வேண்டும்.

"படிக்காமலும் பெரிய ஆள் ஆகலாம்" என்று யாரோ ஒன்று இரண்டு பெயரைப் பார்த்து தவறான பாதையில் செல்லாமல், கல்விதான் உண்மையான, பெருமையான அடையாளம் என்று புரிந்து கொள்ள வேண்டும். கல்வி இருந்தால் மற்ற எல்லாம் தானாக வரும். நீங்கள் எல்லோரும் உலகை வெல்லும் ஆற்றலைப் பெற்று, பகுத்தறிவோடு செயல்பட தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல, குடும்பத்தில் ஒருவனாக இருந்து வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்ப்புதல்வன் திட்டம்; ஆகஸ்ட் முதல் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000 - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.