சென்னை: பாரீசில் நடைபெற்று வரும் 31 வது ஒலிம்பிக் போட்டிகளை நேரில் கண்டு ரசிப்பதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரான்ஸ் சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாரீசில் ஜூலை 26 ஆம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி ஆகஸ்ட் 11 தேதி முடிவடைகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 11 வீரர், வீராங்கனைகள் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள நிலையில், ஒலிம்பிக் போட்டியை பார்வையிடவும் தமிழக வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் விளையாட்டு நிகழ்ச்சிகளை நேரில் பார்வையிட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு துறை அதிகாரிகளுடன் பிரான்ஸ் சென்றுள்ளார்.
இந்திய ஆண்கள் அணியின் வெண்கலம் பதக்க போட்டி, ஈட்டி எறிதலில் இறுதி போட்டி உள்ளிட்ட போட்டிகள் உள்ளது. இவற்றை நேரடியாக காண்பதற்கான உதயநிதி ஸ்டாலின் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டில் 6 நாட்கள் தங்கி இருக்கும் அவர், பிரான்ஸ் பயணத்தை முடித்து ஆகஸ்ட் 14ஆம் தேதி சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: வினேஷ் போகத்திற்கு வெள்ளி பதக்கம்? நடுவர் நீதிமன்றம் கூறுவது என்ன? - paris Olympics 2024