ETV Bharat / state

“நம்ம‌ மெரினா நம்ம பெருமை”.. விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின்! - Udhayanidhi Stalin

Udhayanidhi Stalin: சென்னை மாநகராட்சியில் கருணை அடிப்படையில் 411 பேருக்கு பணி நியமன ஆணையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் (Credits - TN DIPR X page)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2024, 3:38 PM IST

சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், மெரினா கடற்கரையை பொதுமக்கள் தூய்மையாக வைத்திருக்க ஒத்துழைப்பு அளிக்கும் விதமாக "நம்ம‌ மெரினா நம்ம பெருமை" என்ற விழிப்புணர்வு இயக்கம் தொடக்க விழா, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் மெரினா கடற்கரையில் இன்று நடைபெற்றது.

இதில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்று, கடற்கரையை சுத்தமாக வைத்துக் கொள்வதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய 10 குழந்தை தன்னார்வலர்களைப் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். தொடர்ந்து, மாநகராட்சியில் பணியின்போது மரணம் அடைந்த 411 பேரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெரினா மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையைக் கண்காணிக்கவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மணற்பரப்பில் உள்ள கடைகளை கண்காணித்து துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளவும், அனைத்து விதமான நிலப்பரப்பிலும் இயக்கக்கூடிய 4 சக்கர ரோந்து வாகனங்கள் தலா ரூ.16 லட்சம் வீதம் ரூ.48 லட்சத்தில் 3 ரோந்து வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பராமரிக்கப்படும் நீர்நிலைகளில் அகலம் குறைவாக உள்ள கால்வாய்களை பராமரிக்க ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multi Purpose Excavator) போன்ற அதிநவீன இயந்திரங்களை பயன்படுத்தி தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 3.5 மீட்டருக்கும் குறைவான அகலம் கொண்ட நீர்நிலைகளில் தூர் வாரும் 2 ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் இயந்திரங்கள் ரூ.12.97 கோடியில் வாங்கப்பட்டுள்ளன.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரை மணற்பரப்பை சுத்தம் செய்ய 7 இயந்திரங்கள் 2019 ஆண்டு கொள்முதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதனடிப்படையில் நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர் அறிவிப்பின்படி, தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ், தலா ரூ.6 கோடி 48 லட்சத்து 86 ஆயிரத்து 888 வீதம் ரூ.12 கோடி 97 லட்சத்து 73 ஆயிரத்து 776 மதிப்பில் 2 எண்ணிக்கையிலான ரோபோடிக் மல்டிபர்பஸ் எஸ்கவேட்டர் (Robotic Multipurpose Excavator) இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் பணிபுரிந்து பணியிடை காலமான பணியாளர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு, அப்பணியாளர்களின் வாரிசுதாரர்களான 253 ஆண்கள், 158 பெண்கள் என மொத்தம் 411 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், மேயர் பிரியா, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: கேப்டன் விஜயகாந்த் 72வது பிறந்தநாள்: கோயம்பேட்டில் சிலை திறப்பு.. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.