ETV Bharat / state

விடியல் பயணம் திட்டம்; 490 கோடிக்கு மேல் பயண நடைகளை மேற்கொண்டுள்ளதாக அரசு பெருமிதம்! - Vidiyal Payanam Scheme

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 10:13 PM IST

TN Transport Department: பெண்களுக்கான விடியல் பயணத் திட்டத்தின் மூலமாக இதுவரை 490 கோடிக்கு மேல் பெண்கள் பயண நடைகளை மேற்கொண்டிருப்பதாக போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் சிவசங்கர் புகைப்படம்
அமைச்சர் சிவசங்கர் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: தமிழ்நாடு போக்குவரத்துத் துறைக்கு ரூ.18,178 கோடி கடன் இருப்பதாக போக்குவரத்துத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, போக்குவரத்துத் துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சமூக, பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் சிறப்பான பங்களிப்பினை உயர்த்தும் முயற்சியில், அரசு போக்குவரத்துக் கழக சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள விடியல் பயணம் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

மலைப் பகுதிகள் மற்றும் பகுதி மலைப் பகுதிகளில் இயக்கப்படும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ளும் வகையில் இத்திட்டமானது பிப்ரவரி 2024 அன்று மலைப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு விகிதத்தை அதிகரிப்பதும், பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதாகும்.

ஏழ்மை நிலையிலுள்ள பெண்கள் வேலை, மருத்துவமனைகள் மற்றும் சமூக நோக்கங்களுக்காக பயணிப்பதற்கு இத்திட்டம் மிகவும் உதவியாகவுள்ளது. சுயதொழில் இத்திட்டத்தினால், பெண்கள் தொடங்க வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதுடன், தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பெண்கள் தற்போது அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணிக்கும் மாறியுள்ளனர்.

பேருந்துகளில் பயண நடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: தமிழ்நாட்டில் பெண்கள் கட்டணமில்லா பேருந்துகளில் பயணிப்பதன் விளைவாக பேருந்துகளில் பயண நடைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது, 7,334 சாதாரண கட்டண நகரப் பேருந்துகள் மற்றும் மலைப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வகைப் பேருந்துகளில் தினமும் சுமார் 54 இலட்சம் பெண்கள் பயணிக்கின்றனர்.

ரூ.888 சேமிப்பு: இத்திட்டத்தின் கீழ் இதுவரை 490 கோடிக்கு மேல் பேருந்துகளில் பெண்கள் பயண நடைகளை மேற்கொண்டுள்ளனர். இது சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மொத்த பயணிகளில் 65.26 சதவீதமாகும். இத்திட்டத்தினை மாநிலத் திட்டக் குழு மதிப்பீடு செய்ததில், சராசரியாக ஒவ்வொரு பெண் பயணியும் பயணக் கட்டணத்திற்கு ஈடாக மாதத்திற்கு ரூ.888 சேமித்துள்ளனர்.

இச்சேமிப்பு தேவையான பொருட்களை அவர்களின் குடும்பங்களின் பெண்களுக்கு வாங்கவும் மற்றும் ஊட்டச் சத்தினை மேம்படுத்தவும் உதவுகிறது. இதன் விளைவாக, பெண்கள் அதிக அதிகாரமளிக்கப்படும் உணர்வை அனுபவித்து, சமுதாயத்தில் அதிக முக்கியத்துவம் பெற்றவர்களாக திகழ காரணமாகிறது.

இத்திட்டமானது, திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது துணையாளர் (Escort) ஒருவர் அவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டு பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில், திருநங்கைகளும் தினசரி சராசரியாக 3,105 பயண நடைகளுடன் மொத்தம் 29 இலட்சம் பயண நடைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும், மாற்றுத்திறனாளிகளும் தினசரி சராசரியாக 48,636 பயண நடைகளுடன் மொத்தம் 3.93 கோடி பயண நடைகளை மேற்கொண்டுள்ளனர். 3,237 மாற்றுத்திறனாளியுடன் பயணிக்கும் துணையாளர் 22 இலட்சம் பயண நடைகளை மேற்கொண்டுள்ளனர்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீன் மீதான தடை உறுதி"- டெல்லி உயர் நீதிமன்றம்! - Arvind Kejriwal bail

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.