ETV Bharat / state

தீபாவளி: சென்னையிலிருந்து 3.41 லட்சம் பேர் இதுவரை பயணம்.. போக்குவரத்து அமைச்சர் தகவல்! - DIWALI PASSENGERS IN CHENNAI

தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவதால் அரசுக்கு எந்தவித இழப்பும் ஏற்படவில்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சிவசங்கர் பேட்டி
அமைச்சர் சிவசங்கர் பேட்டி (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2024, 10:21 AM IST

சென்னை: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பேருந்தில் இருந்த பயணிகளிடம் உரையாடி குறைகளை கேட்டறிந்தார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது; '' சிறப்பு பேருந்துகள் மூலம் முதல் நாளில் ஒரு லட்சம் பயணிகள் பயணம் செய்திருந்தார்கள். நேற்று (அக்.29) இரண்டு லட்சத்து 31 ஆயிரம் பேர் பயணம் செய்திருந்தார்கள். இன்றைய தினம் (அக்.30) மாலை இந்த நேரம் வரை ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் பயணம் செய்திருக்கிறார்கள்.

ஒட்டுமொத்தமாக இதுவரை மூன்று லட்சத்து 41 ஆயிரத்து 738 பேர் பயணம் செய்திருக்கிறார்கள். இன்னும் ஒரு லட்சத்து மேற்பட்ட பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக அனைத்து பேருந்துகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் வயது வரம்பை 60ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு திருமாவளவன் கடிதம்!

இந்த ஆண்டு வழக்கத்தை விட, புதிய முறையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆம்னி பேருந்து அரசு ஒப்பந்தத்தில் முன்வந்து பேருந்துகளை இயக்கி உள்ளார்கள். தனியார் பேருந்துகள் இயக்குவது எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அரசு கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது.

பேருந்துகள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டிருக்கின்றன. மக்கள் பிரச்சனை இல்லாமல் மகிழ்ச்சியாக பயணம் செய்து வருகிறார்கள். ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீதான சுமையை குறைப்பதற்காக தான் கூடுதல் பேருந்துகளை தனியார் மூலமாக வாங்கி பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு செய்வதால் அரசுக்கு செலவு குறைவாக ஆகிறது. வழக்கமாக எழுகின்ற எந்த புகாரும் இந்த ஆண்டு எழவில்லை'' என இவ்வாறு கூறினார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.