திண்டுக்கல்: அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாகத் திகழ்வது பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில். தமிழகத்திலேயே பழனி கோயிலில் தான் மின் இழுவை ரயில் செயல்படுவது குறிப்பிடத்தக்கது. அதாவது, பழனி தண்டாயுதபாணி சாமி கோயிலில் பக்தர்கள் எளிதாகச் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக, ரோப் கார் சேவை மற்றும் மூன்று மின் இழுவை ரயில்கள் செயல்பட்டு வருகிறது.
இதுவரை மின் இழுவை ரயிலில் ஒரு பெட்டிக்கு 32 பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் இருந்தது. அதனைத் தொடர்ந்து, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் தனது சொந்த செலவில், சுமார் ரூ.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய மூன்றாவது மின் இழுவை ரயில் புதிதாக வாங்கப்பட்டு, கடந்த சில மாதங்களாக சோதனையை ஓட்டம் நடைபெற்று வந்தது.
-
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நவீன வசதிகளுடன் கூடிய மூன்றாவது மின்-இழுவை ரயில் சேவையை இன்று கொடியசைத்து துவக்கிவைத்தபோது.
— R.SAKKARAPANI (@r_sakkarapani) January 24, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data="
இந்நிகழ்வின்போது நாடாளுமன்ற… pic.twitter.com/wu9jS8wNIQ
">மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நவீன வசதிகளுடன் கூடிய மூன்றாவது மின்-இழுவை ரயில் சேவையை இன்று கொடியசைத்து துவக்கிவைத்தபோது.
— R.SAKKARAPANI (@r_sakkarapani) January 24, 2024
இந்நிகழ்வின்போது நாடாளுமன்ற… pic.twitter.com/wu9jS8wNIQமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவுப்படி, திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, நவீன வசதிகளுடன் கூடிய மூன்றாவது மின்-இழுவை ரயில் சேவையை இன்று கொடியசைத்து துவக்கிவைத்தபோது.
— R.SAKKARAPANI (@r_sakkarapani) January 24, 2024
இந்நிகழ்வின்போது நாடாளுமன்ற… pic.twitter.com/wu9jS8wNIQ
சோதனை ஓட்டம் நிறைவுற்ற நிலையில், இன்று, ஒரே நேரத்தில் சுமார் 72 பேர் பயணம் செய்யும் வகையிலும், குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமிரா உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் கூடிய மின் இழுவை ரயிலை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று பக்தர்கள் பயன்பாட்டிற்குத் துவக்கி வைத்தார்.
இதன் மூலம் அதிக அளவிலான பக்தர்கள் விரைவாக மலைக்கோயில் சென்று சாமி தரிசனம் செய்து வர முடியும். தற்போது இந்த அதிநவீன மின் இழுவை ரயில் பக்தர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதால், பக்தர்களும் பொதுமக்களும் அதிக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த புதிய இழுவை ரயில் துவக்கி வைக்கும் நிகழ்வில் பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் அறங்காவலர்கள் உறுப்பினர்கள், பொன்ராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பழனிக்கு பாதயாத்திரையாகச் செல்லும் பாரம்பரியமிக்க நகரத்தார்கள்!