ETV Bharat / state

"விஜயபாஸ்கரால் புதுக்கோட்டைக்கு பாதி தண்ணீர் வரவில்லை” - அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு! - MINISTER REGUPATHY

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 28, 2024, 3:16 PM IST

Updated : Apr 28, 2024, 3:26 PM IST

MINISTER REGUPATHY: மத்திய அரசு ஒதுக்கி உள்ள நிதி யானை பசிக்கு சோளப் பொறி போன்றது எனவும், குஜராத் மாநிலத்தில் போதைப்பொருட்கள் அதிகமாக பிடிக்கப்படுவது ஆச்சரியமான செய்தி இல்லை எனவும் புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

MINISTER REGUPATHY
MINISTER REGUPATHY
MINISTER REGUPATHY

புதுக்கோட்டை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், திமுக சார்பில் புதுக்கோட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் மாவட்ட திமுக அலுவலகம் முன்பாக கோடை கால சிறப்பு தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, எம்எல்ஏ முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரகுபதி, அமலாக்கத்துறை மாவட்ட ஆட்சியர்களிடம் மணல் குவாரி முறைகேடு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “இந்த விசாரணையின் போக்கு ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு எவ்வாறு செல்கிறது என்பதை பார்ப்போம்” என்றார்.

பின்னர், அவர் தொடர்ந்து பேசுகையில், “குஜராத் என்பது போதைப் பொருட்கள் நடமாட்டத்திற்கான மாநிலம். இது நாடறிந்த உண்மை. அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப்பொருள்கள் வருகிறது. பின் பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப்பொருட்கள் அதிகமாக பிடிக்கப்படுவது அதிசயமான செய்தி இல்லை. அதேபோல் ஆச்சரியமாகவும் இல்லை.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோளப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும், எங்களுக்குத் தேவையான நிதியை தரச் சொல்லி நீதிமன்ற மூலமாக மீண்டும் வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார்.

புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து, அவரது கல்லூரிக்கும் அவரது வயலுக்கும் காவிரி நீரைக் கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதனை பார்க்கலாம், அது குறித்து நடவடிக்கை எடுக்கச் சென்றால் போராட்டம் நடத்துவார்கள்.

அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது. ஆனால், இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்னை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வட மாநிலங்களுக்கு பிரச்சாரம் செல்வது வரவேற்கத்தக்கது” என்றார்.

இதையும் படிங்க: திருநின்றவூர் அருகே ஜிம் பயிற்சியாளர் தற்கொலை..! போலீசார் தீவிர விசாரணை.. - Chennai Suicide

Last Updated : Apr 28, 2024, 3:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.