ETV Bharat / state

“மேட்டூரில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு குறைவு ” - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல்! - mrk panneerselvam - MRK PANNEERSELVAM

MRK Panneerselvam: மேட்டூர் அணையிலிருந்து டெல்டா மாவட்ட குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறப்பதற்கான வாய்ப்பு குறைவு. தண்ணீர் வரத்து, இருப்பை பொறுத்து நீர் திறக்கப்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

எம் ஆர் கே பன்னீர்செல்வம் புகைப்படம்
எம் ஆர் கே பன்னீர்செல்வம் புகைப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 5:11 PM IST

சென்னை: சென்னை தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நூலாக்கம் செய்துள்ள தென்னை சாகுபடி செய்யும் விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கும் கையேட்டினை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரன் பெற்றுக் கொண்டார்.

இதையடுத்து, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் செய்தியாளர்களளைச் சந்தித்து கூறியதாவது, “தமிழகத்தில் 91 ஆயிரம் ஹெக்டேர் (Hectare) தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னை சாகுபடி பாதிப்புக்கு ரூ.36 கோடி நிதியில் நோய் தாக்கத்தில் உள்ள தென்னை மரங்களுக்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 30 சதவீதம் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.

கூடுதலாக கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. கொப்பரைத் தேங்காய்க்கான விலையை மத்திய அரசு சற்று அதிகரித்துள்ளது. வெள்ளம் வரும் அளவிற்கு தமிழகத்தில் மழை பெய்யவில்லை. பயிர்களைப் பாதிக்கும் அளவுக்கு மழை பெய்யவில்லை. இருந்தாலும், பயிர் பாதிப்பு தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

108 வரை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு, கடந்த ஆண்டு 60 ஆயிரம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தேங்காய் விலை உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்னை சார்ந்த பொருட்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும்.

டெல்டா பகுதி குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜுன் 12ஆம் தேதி திறக்கும் வாய்ப்பு குறைவு. தண்ணீர் வரத்து மற்றும் இருப்பை பொறுத்து மேட்டூர் அணை திறக்கப்படும். இருப்பினும், நடவு மேற்கொள்ளும் வகையில் விவசாயிகள் தயார் நிலையில் உள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "கடன் பணத்தை வசூலிக்க வேண்டாம்" - வைரலான ஊர் நாட்டாமை வைத்த அறிவிப்புப் பலகை! - Sivakasi Debt Issue

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.