சென்னை: சென்னை நந்தனம் ஆவின் தலைமை அலுவலகத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "ஆவின் நிலையான வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படும் 10 ஆயிரம் பால் கூட்டுறவு சங்கங்களின் கணக்குகள் கணினிமயமாக்கப்படும் பணி தொடங்கி உள்ளது.
மாவட்ட ஒன்றியம் மற்றும் DR அலுவலகத்தில் தனி மின்னஞ்சல் துவங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர் சங்கங்களை நிகர லாபம், கொள்ளளவு சார்ந்து நான்கு பிரிவுகளாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறைவான பால் உற்பத்தி கொடுக்கும் சங்கங்களுக்கு தனிக்கவனம் கொடுத்து ஊக்கம் அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பணியாளர்களுக்கு பல்வேறு நிலைகளில் துறை சார்ந்த தீவிர பயிற்சி தர முடிவும். சங்க உறுப்பினர்களுக்கு சலுகைகள், கடன், இன்சூரன்ஸ், முழு பயணம் அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கும் வகையில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் இல்லாத இடங்களில் புதிய கூட்டுறவு சங்கங்கள் அமைக்கப்படும்.
கடந்த ஆண்டு 300 இடங்களில் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு இன்னும் பல இடங்களில் தொடங்கப்படும். அதன் மூலமாக துறை சார்ந்த பலன்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும். நேற்று நமது ஒன்றியங்கள் மூலம் 36,50,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. உள்ளூரிலே விற்பனை செய்வது இன்னும் கணிசமான தொகையை தருகிறது.
ஒன்றியங்கள் லாபகரமாக இயங்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னை ஆவின் இல்லத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. pic.twitter.com/eSA5NCA1e7
— Mano Thangaraj (@Manothangaraj) July 22, 2024
பால் கையாளும் திறன் அதிகரித்து இருக்கிறது. தனியார் பால் நிறுவனம் என்ன அறிவித்தாலும், ஆவினின் செயல்பாடு அதிகமாகவே இருக்கிறது. ஆவின் பால், உற்பத்தி, கொள்முதல் அதிகமாகி உள்ளது. பால் வரத்து அதிகமானால் ஏற்றுமதி செய்யப்படும்.
ஆவின் பால் விலை குறைப்பதற்கான வாய்ப்பு இல்லை. இந்தியாவில் இந்த அளவு குறைவான பால் விலை எங்கும் இல்லை. இந்த விலைக்கு கொடுக்கவும் முடியாது. முதலமைச்சர் நம்முடைய நுகர்வோர் எந்த சிரமத்திற்கும் ஆளாகக் கூடாது என்பதுதான் ஒரு திட்டமாக வைத்திருக்கிறார்.
மேலும், விலையேற்றம் குறித்து நுகர்வோரிடம் ஆலோசனை செய்து முடிவு எடுக்கப்படும். முதலமைச்சரிடம் ஆலோசித்து வருகின்ற காலகட்டங்களில் செயல்படுத்தலாம். இப்போது அந்த எண்ணம் இல்லை. மாதாந்திர ஆய்வுக் கூட்டத்தில் பேரிடர் காலத்தை கையாளும் திட்டம் தீட்டப்பட்டது.
கடந்த காலக் கட்டங்களில் சென்னையில் நடந்த வெள்ளப்பெருக்கு அனுபவத்தின் அடிப்படையில், வருகிற காலக்கட்ட நெருக்கடி நிலையைச் சமாளிக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மத்திய அரசு ஐசியுவில் இருப்பதால், யார் ஆக்ஸிஜன் கொடுக்கிறார்களோ அவர்களை காப்பாற்ற வேண்டிய நிலை இருக்கிறது. அதனால் அவர்களுக்கு பட்ஜெட்டில் நிதி அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாட்டிற்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய அரசு பாகுபாடு இல்லாமல் மாநிலங்களுக்கு பட்ஜெட் வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை, அது மட்டுமே வருத்தம்" என்றார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “பக்தர்கள் உணவருந்திய இலையில் அங்கப்பிரதட்சணம் செய்வதில் சாதிய பாகுபாடு உள்ளது” - நீதிமன்றத்தில் வாதம்! - madurai high court bench