ETV Bharat / state

தேர்தல் வருவதால் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி துவக்கம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்! - Narendra Modi

Construction Work of Madurai AIIMS: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை, தேர்தல் வருகிறது என்பதால் முன்கூட்டியே துவக்கியுள்ளனர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Construction Work of Madurai AIIMS
அமைச்சர் மா சுப்பிரமணியன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 5, 2024, 9:41 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சைதாப்பேட்டையில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி, நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு முடிவுற்ற பணிகள் மற்றும் பல்வேறு புதிய பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகளை இன்று துவக்கியுள்ளது குறித்த கேள்விக்கு, "ஜைக்கா நிறுவனத்தின் துணைத் தலைவரைச் சந்தித்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி வழங்குவது குறித்தும், 5 ஆண்டுகளாக கட்டப்படாமல் உள்ளது.

இதனை விரைந்து கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். அப்போது 2024-இல் இறுதியில் பணிகள் துவக்கப்பட்டு, 2028இல் முடியும் என கூறினார்கள். ஆனால், தேர்தல் வருகிறது என்பதால், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளை இந்த ஆண்டு இறுதியில் துவக்கப்படுவதை முன்கூட்டியே துவக்கி உள்ளனர்" என்று பதிலளித்தார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை மக்களுக்கு திமுக வெள்ளத்தின்போது எதுவும் செய்யவில்லை என பிரதமர் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "தேர்தலுக்கு முன்னர் இன்னும் 4 தடவை சென்னைக்கு வந்து சுற்றிப் பார்த்து விட்டு, அதன் பின்னர் கூறினால் ஏற்றுக் கொள்வோம்.

எந்தத் திட்டத்திற்கு திமுக முத்திரை போட்டுள்ளது என்பதைக் கூற வேண்டும் என ஏற்கனவே முதலமைச்சர் கூறியுள்ளார். திமுக எந்த திட்டத்திற்கு முத்திரை போட்டது என்பதைக் கூற வேண்டும். பொத்தாம் பொதுவாக எடுத்தேன், கவிழ்த்தேன் என பேசிவிட்டுச் செல்வது பெரிய பொறுப்பில் இருப்பவர்களுக்கு அழகல்ல. குறிப்பிட்டுக் கூறினால், பதில் கூற தயாராக இருக்கிறோம்.

தேர்தல் குறித்து பிரதமருக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தால்தான் சென்னைக்கு வருகிறார். தேர்தல் முடிவதற்குள் எத்தனை முறை அச்சத்தால் சென்னைக்கு வருவாரோ தெரியாது. வெள்ள மேலாண்மை சரியாகச் செயல்பட்டதா இல்லையா என்பதை அடையாறு ஆற்றங்கரையோரம் ஜோதியம்மாள் நகர் போன்ற குடிசைப் பகுதியில் உள்ள மக்களைக் கேட்டுவிட்டு பின்னர் சொல்ல வேண்டும்.

வெறுமனே எங்கோ இருந்து கொண்டு சொல்வது சரியாக இருக்காது. அடையாறு ஆற்றங்கரை ஓரம் உள்ள குடிசைப் பகுதியில் உள்ள மக்களிடம் கேட்டுவிட்டுச் சொல்ல வேண்டும். இதற்கான பதில் அப்போது வரும். தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்கின் மூலம் தெரிந்து கொண்டு, அடுத்த கூட்டத்தில் சொன்னால் நன்றாக இருக்கும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கல்பாக்கத்தில் ஈனுலை.. பிரதமர் மோடி விழாவை முதல்வர் புறக்கணித்தது ஏன்.. அறிவியலா? அரசியலா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.