ETV Bharat / state

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எப்போது திறப்பு? அமைச்சர் கே.என்.நேரு அளித்த விளக்கம்.. - Panjappur New Bus Stand

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 8:36 PM IST

Panjappur New Bus Stand: திருச்சி அடுத்த பஞ்சப்பூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நவீன பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை ஆகஸ்ட் மாதத்திற்கு முடிக்க திட்டமிட்டுள்ளது குறித்து, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.

அமைச்சர் கே.என்.நேருவுடன் அதிகாரிகள்
அமைச்சர் கே.என்.நேருவுடன் அதிகாரிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)
அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

திருச்சி: திருச்சி மாநகர் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையம் முக்கிய பேருந்து நிலையமாக இருந்து வருகிறது. இந்நிலையில், போக்குவரத்து நெரிசல், மாநகர பகுதி விரிவாக்கம் உள்ளிட்டவற்றைக் காரணம் காட்டி, திருச்சியின் புறநகர் பகுதியான பஞ்சப்பூர் பகுதியில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது.

மேலும், புதிதாகக் கட்டப்படும் இந்த பேருந்து நிலையத்தில், வாகன முனையம், சாலைகள், மழைநீர் வடிக்கால், நகரும் படிக்கட்டுகள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன், சுமார் 380 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என கூறப்பட்டது.

இந்நிலையில், பஞ்சப்பூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தைத் தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர மேயர் அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சரவணன் உள்ளிட்டோர் இன்று (திங்கட்கிழமை) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அதன் பின்னர், அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, "ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் புதிதாகக் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து இன்று மாலை மாநகராட்சி மேயர், ஆணையர் உள்ளிட்டோர், ஒப்பந்ததாரர்களை அழைத்து, பணிகளை விரைவில் முடிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளனர்" என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் ஆய்வு செய்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, " விமான நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள முனையத்தில் குடிநீர் வசதி உள்ளிட்டவை மற்றும் முக்கிய பிரமுகர்கள் வருகை மற்றும் புறப்பாடு பாதைகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: லேப்டாப்பில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்.. திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.