சென்னை: திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானை, அப்பொறுப்பில் இருந்து கடந்த வாரம் விடுவித்து புதிய மாவட்ட பொறுப்பாளராக சேகர் நியமனம் செய்யப்படுவதாக திமுக தலைமை அறிவித்திருந்தது.
இந்நிலையில் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக அவைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தானின் கட்சி பதவி பறிக்கப்பட்டது திமுக வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் விவாதத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் இப்போது அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் மாவட்ட அவைத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தூய்மை பணியாளர் மகள் டூ நகராட்சி ஆணையர்.. குடும்பத்தின் அடையாளத்தை மாற்ற போராடிய திருவாரூர் பெண்!