ETV Bharat / state

பாஜக அரசிடம் அடகுவைத்த உரிமைகளை மீட்க அஞ்சும் அதிமுக - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Minister Anbil Mahesh Poyyamozhi: பாஜகவிடம் அதிமுக அடகு வைத்த உரிமைகளை மீட்க தமிழ்நாடு அரசுடன் இணைந்து குரல் கொடுக்க வாருங்கள் என்றபோதும், அதிமுகவினர் அச்சத்தோடு உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

Minister Anbil Mahesh Poyyamozhi critics AIADMK
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 10:55 AM IST

Updated : Feb 18, 2024, 1:20 PM IST

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மேடையில் பேச்சு

கோவை: உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல், 'பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் கோவை நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரை கூட்டம் கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று (பிப்.17) மாலை முதல் இரவுவரை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், '3 நாட்கள் திமுகவின் 68,000 பாக முகவர்களுக்கும், 6,80,000 பூத் கமிட்டி உறுப்பினர்களுக்குமான கூட்டத்தில் பொதுமக்களும் பங்கேற்றுள்ளனர்.

பாசிசம் சரியத் தொடங்குவதற்குக் காரணம் மு.க.ஸ்டாலின் என்றும், மாநில உரிமையைப் பற்றி தொடர்ந்து பேசி வருவதும்தான் காரணம். திராவிட மாடல் அரசின் 33 மாதங்களில் 1,339 கோயில்களுக்குக் குடமுழுக்கு செய்த அரசாக உள்ளது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழ் மொழியில் அர்ச்சனை எனக் கொண்டு வந்து, "சுக்லா பரதம்" என்ற சமஸ்கிருத துதியையும் பாடி, சமஸ்கிருதம் புரியவில்லை, "பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன்" என தமிழில் கூறினால்தான் எனது தமிழ்க்கடவுளுக்குப் புரியும்.

நாமெல்லாம் ஏதோ ஆன்மீகத்திற்கு எதிரானவர்கள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தத் துடிக்கிறது இந்த பாசிச அரசாங்கம். இதை முறியடிக்கவேண்டும். நண்பர்களாக இருந்த தீரன் சின்னமலையும், திப்புசுல்தானும் ஆங்கிலேயர்களை விரட்டியடித்தது தமிழ்நாட்டை மட்டுமே காப்பதற்காக அல்ல. இருவரும், ஒட்டுமொத்த இந்தியாவையும் பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து காக்க வேண்டுமெனப் போராடியவர்கள்.

இப்படி இஸ்லாமியர்கள், இந்து போன்றவர்கள் ஒற்றுமையாக நமது நாட்டைக் காத்தனர் என்று சொல்லும்போது, அதற்கானப் பிரிவினையைக் கொண்டுவர நினைப்பவர்களே பாசிச பாஜக. இவர்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய ஆட்சியாகவே அதிமுக ஆட்சி இருந்தது. மாநில உரிமைகளை அதிமுக மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டது.

இருப்பினும், மாநில உரிமைகளை மீட்டெடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்தாலும் அவர்கள் துணிந்து வராமல், தங்கள் மீது வழக்கு வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் உள்ளனர்' என்று குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர், 'சிறையில் உள்ள செந்தில் பாலாஜி என்பதற்காக இல்லை. திமுக தொண்டர் என்ற அடிப்படையில், அவருக்குத் துணையாக திமுக இருப்பதாக அச்சத்தை ஏற்படுத்த அமலாக்கத்துறை, ஐடி-யை மத்திய அரசு ஏவிப் பார்க்கின்றனர்.

வாக்களித்தாலும், வாக்களிக்கா விட்டாலும் கோவையை காக்க வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். சட்டப்பேரவையில் மாநில அரசால் கொடுக்கப்பட்ட அறிக்கையை வாசிக்க முடியாது என ஆளுநர் சொல்வதற்கு அதிகாரமில்லை. மிக்ஜாம் புயலில் இவ்வளவு நிதி தேவைப்படுகிறது. அவர்கள் தருவார் என நம்பிக்கையுடன் தான் தெரிவித்தும் தவறாக எதுவும் குறிப்பிடாத போதும் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை கூட்டத்தில் அதனைப் படிக்கவில்லை.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சக்திக்கு மீறி செயல்பாட்டு கொண்டிருப்பதாக நீதிமன்றமும் அவரைப் பாரட்டியுள்ளது. கோவை தொகுதியில் மீண்டும் நாடாளுமன்ற தேர்தலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கட்டிடமாக வெற்றியை ஏற்படுத்தி தர வேண்டும்’ என தெரிவித்தார்.

இதையும் படிங்க: “தமிழகத்தில் காங்கிரஸ் பலத்திற்கு ஏற்ப திமுக சீட் கொடுப்பார்கள்” -மயூரா ஜெயக்குமார் நம்பிக்கை!

Last Updated : Feb 18, 2024, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.