ETV Bharat / state

தீபாவளிக்கு இப்படி ஒரு ஸ்நாக்ஸ் வெரைட்டியா? அடித்து நொறுக்கும் சிறுதானிய பலகாரங்கள்! - DIWALI SPECIAL MILLET SNACKS

மனிதர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தியைத் தரக்கூடிய திணை வகைகள் மற்றும் சிறுதானியங்களைக் கொண்டு புதுக்கோட்டையில் தயார் செய்யப்படும் தின்பண்டங்கள் அதிக வரவேற்பைப் பெற்று விற்பனையாகி வருவதாக கூறுகின்றனர்.

சிறுதானிய பலகாரம்  Pudukkottai  Millet snacks  Diwali festival
தீபாவளிக்கு தயாராகும் சிறுதானிய பலகாரம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2024, 1:44 PM IST

புதுக்கோட்டை: தீபாவளி பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவது புத்தாடை, பலகாரம், பட்டாசு உள்ளிட்டவையே. அந்த வகையில், அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய தின்பண்டங்களை, அதிக நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய திணை வகைகள், சிறுதானியங்கள், கவுனி அரிசி உள்ளிட்டவற்றைக் கொண்டு தயார் செய்து, விற்பனை செய்து வருகிறது புதுக்கோட்டையில் உள்ள "புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் கம்பெனி". அது குறித்த சிறப்புத் தொகுப்பைக் காணலாம்.

நமது பாரம்பரியம், நமது உணவு: நமது பாரம்பரியமும், பாரம்பரிய உணவுப் பழக்கவழக்கங்களும் இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், சிறுதானியங்களான வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களில், இத்தலைமுறைக்கும் பிடித்த வகையில் முறுக்கு, மிக்சர், அதிரசம், காராசேவு, சீடை, லட்டு போன்ற சிறுதானிய தின்பண்டங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருவதாக இந்த நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர்.

இயற்கை விவசாய உற்பத்தி கம்பெனி பணியாளர் விஜயா பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu)

இதற்காக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,364 விவசாயிகளை ஒன்றிணைத்து, அவர்கள் வயல்களில் விளைவிக்கப்படும் நெல், சிறுதானியப் பயிர்கள் போன்றவற்றைப் பெற்று இந்த நிறுவனம் இயங்கி வருவதாக தெரிவிக்கின்றனர்.

சிறுதானிய உணவு வகை: தினை அதிரசம், கவுனி அதிரசம், தினை மிக்சர், வரகு மிக்சர், ராகி மிக்சர், வரகு முறுக்கு, தினை முறுக்கு, கவுனி முறுக்கு, ராகி முறுக்கு, மாப்பிள்ளை சம்பா முறுக்கு, தூயமல்லி முறுக்கு, தினை மனோவளம், கம்பு லட்டு, தினை லட்டு, ராகி லட்டு, மாப்பிள்ளை சம்பா லட்டு, கருப்பு உளுந்து லட்டு, பாசிப்பயறு லட்டு, தினை காரசேவு, வரகு காராச்சேவ் என சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசியில் செய்த தின்பண்டங்களைப் பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

அதுமட்டுமின்றி, பலகாரங்கள் மற்றும் இனிப்பு வகைகள் செய்வதற்குப் பயன்படும் எண்ணெய் வகைகள் இந்நிறுவனத்தில் இருக்கக்கூடிய செக்கில் கலப்படமில்லாமல் தயாரிக்கப்படுவதாகவும், எந்த வித வேதிப்பொருளும் பயன்படுத்தாமல் நாட்டுச் சர்க்கரை, வெல்லம், பனங்கருப்பட்டி ஆகியவை இனிப்புக்குப் பயன்படுத்தப்படுவதாகவும், குறிப்பாக எந்த விதத்திலும் வெள்ளை சர்க்கரை பயன்படுத்துவதில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

குழந்தைகளுக்கு பிடித்ததை விற்பதில் மகிழ்ச்சி: புதுக்கோட்டை 'இயற்கை விவசாய உற்பத்தி கம்பெனி' மேலாளர் அகிலா ஈடிவி பாரத்திடம் கூறுகையில், "இந்த வருடம் அதிக அளவு வரவேற்பு கொடுத்துள்ள மனோலம் (அதாவது காராசேவில் வெல்லம் கலந்த பலகாரம்), செயற்கை சாயம், வெள்ளைச் சர்க்கரை, மைதா மாவு, பதப்படுத்துவதற்கான வேதிப்பொருட்கள் என உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய எவ்விதமான செயற்கை பொருட்களும் சேர்க்காமல், சுத்தமான நாட்டுக் கடலை பருப்பு மற்றும் கடலையில் ஆட்டி எடுக்கப்பட்ட கடலை எண்ணெய், நாட்டுச்சர்க்கரை, பனை கருப்பட்டி கொண்டு அனைத்து தின்பண்டங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் விரும்பி அருந்திய கம்மங்கூழ், கேப்பை கூழ், கவுனி அரிசி போன்ற உடலுக்கு சக்தி தரக்கூடிய எந்த ஒரு உணவையும் தற்போதுள்ள குழந்தைகள் விரும்பாத சூழலில் உள்ளது. ஆனால், சத்துள்ள கேப்பை, கம்பு, சிறுதானியங்கள், முளைக்கட்டிய பயிர் வகைகள், திணை வகைகள், பாரம்பரிய நெல் வகைகளைக் கொண்டு தற்போதுள்ள குழந்தைகளுக்கு பிடித்தவாறு தின்பண்டங்களை விற்பனை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி. வருங்கால சந்ததியினர் ஆரோக்கிய வாழ்வு வாழக்கூடிய சூழல் உருவாகும்" எனத் தெரிவித்தார்.

கருப்பட்டி மைசூர் பாகு: இயற்கை விவசாய உற்பத்தி கம்பெனியின் பணியாளர் விஜயா பேசுகையில், "இந்த வருடத்தின் புதிய வரவாகக் கருப்பட்டியால் செய்யக்கூடிய மைசூர் பாகு மற்றும் ராகி, கருப்பு கவுனி, கம்பு, திணை ஆகியவற்றில் குழந்தைகளுக்குப் பிடித்தவாறு பிஸ்கட் தயார் செய்து இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தியுள்ளோம். தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், பல்வேறு பலகார வகைகள் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தின்பண்டங்கள், தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்நிறுவனத்தின் மூலம் ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவிக்கக் கூடிய நெல் உள்ளிட்ட தானியங்களை நேரடியாக விற்பனை செய்தும் பயன்பெற்று வருகின்றனர். குறிப்பாக, இங்கு பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுவதால், அவர்களது வாழ்வாதாரமும் சிறப்பாக உள்ளது" எனத் தெரிவித்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.