ETV Bharat / state

பள்ளிகளின் பெயரிலுள்ள 'மெட்ரிகுலேஷன்' என்பதை நீக்க கோரிய வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் முக்கிய உத்தரவு! - MATRICULATION SCHOOL NAME CHANGE

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 1, 2024, 9:46 AM IST

தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் பெயரில் உள்ள மெட்ரிகுலேஷன் என்ற வார்த்தையை நீக்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் -கோப்புப்படம்
சென்னை உயர்நீதிமன்றம் -கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamilnadu)

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளின் பெயரில் உள்ள மெட்ரிகுலேஷன் என்ற பெயரை நீக்கும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக கூறிியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பெயரில் உள்ள 'மெட்ரிகுலேஷன்' என்ற பெயரை நீக்கி, தனியார் பள்ளி என பெயர் வைக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வேமன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த கோரிக்கை தொடர்பாக 2019 மற்றும் 2021ம் ஆண்டுகளில் அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தமது மனுவில் வேமன் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, குறிப்பிட்ட முறையில் கொள்கை முடிவு எடுக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. மனுதாரர் கோரிக்கை தொடர்பாக நிபுணர்கள் தான் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்து, மனுதாரரின் கோரிக்கையை விரைந்து பரிசீலிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது.

இதையும் படிங்க: முன்னாள் அதிமுக எம்எல்ஏ பற்றி அவதூறு பரப்பியதாக திமுக நிர்வாகிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.