ETV Bharat / state

சென்னை தீவுத் திடலில் தீபாவளி பட்டாசு கடைகள்..தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு! - theevuthidal cracker shops tender - THEEVUTHIDAL CRACKER SHOPS TENDER

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நிபந்தனைகளை திரும்ப பெற்றுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதையடுத்து திருத்தியமைக்கப்பட்ட டெண்டரை வெளியிட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் -கோப்புப்படம் (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2024, 5:47 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்கான டெண்டரில் வெளிப்படை தன்மை இல்லை என்றும், டெண்டர் நியாமான முறையில் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை பட்டாசு விற்பனையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில், அதன் தலைவர் நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்காக டெண்டர் அறிவிப்பு ஆணை செப்.13ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், “தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் நிர்வாக இயக்குனர் டெண்டர் தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பார். டெண்டரை மாற்றியமைக்கவும், டெண்டர் விண்ணப்பத்தை எந்த காரணமும் தெரிவிக்காமல் ஏற்பதற்கும், நிராகரிப்பதற்கு அதிகாரம் உள்ளது” இவ்வாறு டெண்டர் நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது போன்ற சில நிபந்தனைகளை நீக்கி விட்டு, அக்டோபர் 18ஆம் தேதி முதல் நவம்பர் 1ஆம் தேதி வரையில் தீவுத்திடல் பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தப்பட்ட டெண்டர் அறிவிப்பை வெளியிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படிங்க: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் பதவியேற்பு

இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் டெண்டர் நிபந்தனைகள் தமிழ்நாடு டெண்டர் வெளிப்படை தன்மை விதிகளுக்கு எதிராக இருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து, புதிய டெண்டர் நிபந்தனைகளை திரும்ப பெற்றுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்த நீதிபதி, தீவுத்திடலில் பட்டாசு கடை அமைப்பதற்கான திருத்தியமைக்கப்பட்ட டெண்டரை வெளியிட உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.