சென்னை: சென்னையில் உள்ள சி.பி.கே ஸ்டீல் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தங்கள் கம்பெனியுடைய வங்கி கணக்கு சென்னையில் உள்ளது. சென்னையில் உள்ள வங்கு கணக்கை மகாராஷ்டிரா, கேரளா மற்றும் குஜராத் உள்பட நான்கு மாநில போலீசார் முடக்கம் செய்து விட்டார்கள்.
வங்கி கணக்கை எதற்காக முடக்கம் செய்துள்ளார்கள்? என்ன காரணத்துக்காக? எந்த வழக்கில் முடக்கும் செய்துள்ளார்கள்? என்ற விவரங்கள் எல்லாம் தெரிவிக்காமல் கணக்கை முடக்கம் செய்து விட்டார்கள். இது சட்டவிரோதமானது. அதனால், வங்கிக்கணக்கை முடக்குவதற்கு முன் இந்தியா முழுவதும் உள்ள காவல்துறையினர் கடைபிடிக்க வேண்டிய உரிய விதிமுறைகளை வகுக்க மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இளம் தலைமுறையை பாதிக்கும் “கூலிப்” போதைப்பொருள் எப்படி பாதுகாப்பானது? - ஐகோர்ட் அதிரடி கேள்வி!
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நிறுவனம் சார்பில் ஆஐரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன், வங்கிக் கணக்கு முடக்கம் செய்வதற்கு முன்பு சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு நோட்டீஸ் கொடுத்து, எதற்காக முடக்கம் செய்யப் போகிறோம் என்று விளக்கம் அளித்து, பின் எந்த வழக்கில் முடக்கப் போகிறோம் என்று தகவல் தெரிவித்த பிறகு தான் முடக்கம் செய்ய வேண்டும் என்ற விதிமுறையை வகுக்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மத்திய அரசு இரண்டு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.