ETV Bharat / state

போலி மருத்துவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள்; ஐகோர்ட் காட்டம்! - high court madurai bench

Fines imposed on the hospital: கரோனா தொற்று காலத்தில் மருத்துவமனை சுகாதாரம் இல்லை என்று கூறி விதித்த அபராதத்தை திரும்ப பெற கோரி வழக்கில், சுகாதாரத்துறை அதிகாரிகள் 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
உயர் நீதிமன்றம் மதுரை கிளை (Photo Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 6, 2024, 9:08 PM IST

மதுரை: கரோனா தொற்று காலத்தில் மருத்துவமனை சுகாதாரம் இல்லை என்று கூறி விதித்த அபராதத்தை திரும்ப பெற கோரி தென்காசியை சேர்ந்த அமிர்தலால் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், “தென்காசியில் தனியார் மருத்துவமனை மற்றும் மருந்தகம் நடத்தி வருகிறேன். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா தொற்று காலத்தில் எனது மருத்துவமனையில் சோதனை மேற்கொண்ட சுகாதாரக் குழுவினர், மருத்துவமனை சுகாதாரம் இல்லை எனக் கூறி ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.ஆனால், எனது மருத்துவமனை சுகாதாரமாக உள்ளது. எனவே, எனக்கு விதித்த அபராத தொகையை திரும்பத் தரக் கோரி அதிகாரியிடம் மனு அளித்தேன். அது நிராகரிக்கப்பட்டது. எனவே, எனக்கு அபராதம் விதித்த ரூ. 5 ஆயிரம் தொகையை திரும்ப தர உத்தரவிட வேண்டும்” என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி முரளி சங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், “தமிழகத்தில் கரோனா தொற்று காலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஆய்வு செய்தபோது, சுகாதாரமற்ற நிலை இருப்பது கண்டறியப்பட்டது. அதன் அடிப்படையில், சுகாதரமற்ற முறையில் உள்ள மருத்துவமனைகளில் ரூ. 14.50 கோடி அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.

இந்தத் தொகை கரோனா காலகட்டத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள், செவிலியர்கள், முண்களப் பணியாளர்கள் என அனைவருக்கும் சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. எனவே, மனுதாரர் கோரும் அபராத தொகையை திரும்ப வழங்க இயலாது” என தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவவில், “ மனுதாரர் தனது மருத்துவமனையை சுகாதாரமாக வைத்திருந்ததற்கான எந்த ஆவணங்களையும் வழங்கவில்லை. அதிகாரிகள் அந்த மருத்துவமனையில் ஆய்வு செய்து அபராதம் விதித்தது சரியானது. எனவே, மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.அதேநேரம் தகுதி இல்லாத மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் பார்த்துள்ளனர்.

மனுதாரர், எலக்ட்ரோ ஹோமியோபதி மெடிசன் டிப்ளமோ சான்றிதழை சமர்ப்பித்துள்ளார். இந்த சான்றிதழை வைத்து மருத்துவம் பார்க்க முடியாது. இது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போலி மருத்துவர்கள் சமூகத்திற்கு ஆபத்தானவர்கள். இது போன்ற பட்டயப் படிப்பு சான்றிதழ்களை வைத்து பொதுமக்கள் உயிருடன் விளையாடுகின்றனர்.

எனவே, போலி மருத்துவர்களை தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மனுதாரரின் மருத்துவமனையை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு பணி புரியும் மருத்துவர் உள்ளிட்டோர் தகுதியானவர்களா? என்பதை விசாரணை செய்ய வேண்டும். அதில் தவறு இருந்தால் சம்மந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கு குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மூன்று மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

இதையும் படிங்க: ஆபாச விளம்பரங்களுக்கு தடை கோரிய வழக்கு; கூகுள் நிறுவனத்துக்கு ஐகோர்ட் 'செக்'! - porn advertisement issue

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.