ETV Bharat / state

கள்ளகள்ளக்குறிச்சி விவகாரம்; சிபிஐ-க்கு மாற்றகோரிய அதிமுக, பாமகவின் மனு விசாரணை ஒத்திவைப்பு - kallakurichi Hooch Tragedy - KALLAKURICHI HOOCH TRAGEDY

kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அதிமுக, பாமக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை, அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று, இவ்வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்து உத்தரவிட்டது.

மது கோப்புப்படம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம்
மது கோப்புப்படம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 26, 2024, 1:16 PM IST

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றக் கோரி, அதிமுக வழக்கறிஞர்கள் அணி மாநிலச் செயலாளர் இன்பதுரை மற்றும் பாமக செய்தித் தொடர்பாளரும், சமூக நீதிப்பேரவை தலைவருமான வழக்கறிஞர் பாலு ஆகியோர் தாக்கல் செய்திருந்த வழக்குகள், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் இன்று (ஜூன் 26) மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், அரசின் அறிக்கை தயாராக உள்ளது. அதை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கவேண்டும். அதனால், வழக்கின் விசாரணையை 10 நாட்களுக்கு தள்ளிவைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

ஆனால், வழக்கில் உடனடியாக புலன் விசாரணையை நடத்த வேண்டும். புலன் விசாரணையை உரிய நேரத்தில் துவங்காவிட்டால் ஆதாரங்கள் அழிந்து விசாரணையில் பாதிப்பு ஏற்படும். விசாரணை வீணாகி விடும் என பாலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், 'ஏற்கனவே இந்த சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மெத்தனால் எங்கிருந்து வந்தது என்பதும் கண்டறியப்பட்டுள்ளது' என்றார். தொடர்ந்து அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரி, ஒவ்வொரு ஆண்டும் கள்ளச்சாராய மரண சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

இதுசம்பந்தமான வழக்குகளில் தாமதமான விசாரணை காரணமாக, குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டு விடுகின்றனர். அதனால், விரைந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். இதையடுத்து, வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஜூலை 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: போதைக்கு முற்றுப்புள்ளி.. அதுதான் எல்லாத்துக்கும் தீர்வு.. கண்ணீருடன் கூறும் கள்ளக்குறிச்சி பெண்கள்.! - ban drugs including alcohol

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.