ETV Bharat / state

காவிரியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்.. கிடுகிடுவென உயரும் மேட்டூர் அணை நீர்மட்டம்! - mettur dam water level - METTUR DAM WATER LEVEL

Mettur dam water level: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 15 நாட்களில் எட்டு அடி உயர்ந்து உள்ளது. இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை(கோப்புப் படம்)
மேட்டூர் அணை(கோப்புப் படம்) (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jul 18, 2024, 10:50 AM IST

சேலம்: தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றான மேட்டூர் அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடி ஆகும். மேலும் அதிகபட்ச கொள்ளளவு 93.47 டிஎம்சி அடியாகும். இந்த அணையானது சேலம் மாவட்ட மக்களுக்கு மட்டும் அல்லாது ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் நீர் ஆதரமாகவும் விளங்கி வருகிறது.

மேலும், டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கான முக்கிய நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால், டெல்டா பாசனத்திற்காக ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,000 கன அடியாக குறைக்கப்பட்டது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வந்தது. இதனால் கடந்த மூன்றாம் தேதி அணையின் நீர்மட்டம் 39.65 அடியாகக் குறைந்து அதலபாதாளத்திற்கு சென்றது. நீர் இருப்பும் 11.91 டிஎம்சியாக இருந்தது.

மேட்டூர் அணை நீர்மட்டம்: இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் கபினி அணை நிரம்பியது.

இதனையடுத்து கபினி அணையில் இருந்து உபரி நீர் மேட்டூர் அணைக்கு திறந்து விடப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்ப நேற்று முன்தினம் 44.62 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 48.80 அடியாகவும் 14.59 டிஎம்சியாக இருந்த நீர் இருப்பு நேற்று 15.85 டிஎம்சியாகவும் உயர்ந்தது.

இந்த நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 50.30 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 17.83 டிஎம் சியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 20 ஆயிரத்து 910 கன அடியிலிருந்து 23 ஆயிரத்து 989 கன அடியாக உயர்ந்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர்த் தேவைக்காக ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 9 நிமிடத்திற்குள் 100 லோகோக்களின் பெயர்கள்.. சடசடவென கூறி உலக சாதனை படைத்த 2 வயது குழந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.