ETV Bharat / state

தீவட்டிப்பட்டி கலவரம்; பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்! - Deevattipatti amman temple riots - DEEVATTIPATTI AMMAN TEMPLE RIOTS

Deevattipatti Mariamman temple riots: ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னையில் பாதிக்கப்பட்ட மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவர்கள் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகைப்படம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புகைப்படம் (Credits to E TV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 3, 2024, 9:56 PM IST

சேலம்: ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டியில் உள்ள கோயில் ஒன்றில் திருவிழாவில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் கடைகள் தீ வைக்கப்பட்டதால், இன்று (மே 3) அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது. சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

இத்தனை ஆண்டுகளாக இந்த திருவிழாவை ஒரு தரப்பினர் மட்டுமே தலைமை ஏற்று நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், மற்றொரு பிரிவினர், இந்த ஆண்டு திருவிழாவை நாங்களும் எடுத்து நடத்துவோம் எனக் கூறி வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று (மே 2) இருதரப்பு பிரதிநிதிகளையும் அழைத்து, ஓமலூர் வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த ஒரு தீர்வும் காணப்படாததால், இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையின்போது வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியுள்ளது.

இதையடுத்து, மோதலில் ஈடுபட்டவர்கள், தீவட்டிப்பட்டி பகுதியில் இருந்த பேக்கரி, டீக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கடைகள் மீது கற்களை வீசி தீ வைத்தனர். கலவரம் குறித்த தகவல் அறிந்ததையடுத்து, சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் தலைமையிலான 200க்கும் மேற்பட்ட போலீசார், கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது தடியடி நடத்தி, அப்பகுதியில் இருந்து கலையச் செய்தனர்.

மேலும், இந்த தடியடியில் ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 13 பேர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவல் அறிந்த உடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் மேவை சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி எம்.குணசேகரன், ஓமலூர் தாலுகா செயலாளர் என்.ஈஸ்வரன், கட்சி மாவட்டக் குழு உறுப்பினர் வி.பெரியசாமி, ஓமலூர் கட்சி தாலுகா குழு உறுப்பினர் தும்பிப்பாடி முருகன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், பாதிக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக ஆறுதல் கூறினர்.

மேலும், காடையாம்பட்டி வட்டாட்சியர் மற்றும் தீவட்டிப்பட்டி காவல் நிலைய அதிகாரிகள், ஓமலூர் காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் நேரடியாகச் சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருப்பு பகுதிக்கு நேரில் சென்று தடியடியில் காயமான மக்களுக்கு ஆறுதல் கூறி, அநியாயமான நடவடிக்கை எதிராகவும், காலம் காலமான வழிபாட்டு உரிமையை பெற்றுத் தருவதிலும் மார்க்சிஸ்ட் கட்சி துணை நிற்கும் என மக்களிடம் உறுதி கூறியுள்ளனர்.

அடுத்தகட்ட நடவடிக்கையாக மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரைச் சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கேட்டும், பொய் வழக்குகளை ரத்து செய்யவும், எரிக்கப்பட்ட கடைக்கு தமிழக அரசு நிவாரணம் தரவும், காலங்காலமான வழிபாட்டு உரிமையைத் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக அடுத்த கட்ட நடவடிக்கைக்கு திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது" என தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: சேலம் திருவிழாவில் இரு தரப்பினருக்கிடையே மோதல்; சேலம்-பெங்களூரு நெடுஞ்சாலையில் கடைகளுக்கு தீ வைப்பு; போலீசார் தடியடி! - Salem Festival Clash

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.