ETV Bharat / state

திருப்பூரில் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்; கோவையில் செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..! - செய்தியாளர் நேசபிரபு

Tiruppur Journalist Attack: திருப்பூர் மாவட்டம் பல்லடம் செய்தியாளரை மர்ம நபர்கள் அரிவாளால் தாக்கிய சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் விதமாக, கோயம்புத்தூர் மாவட்ட செய்தியாளர்கள், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 25, 2024, 4:43 PM IST

கோவையில் செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

கோயம்புத்தூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்காவில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருபவர் நேசபிரபு என்பவரை மர்ம கும்பல் ஒன்று நோட்டமிட்டு வந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று (ஜன.24) நேசபிரபு வீட்டில் இருந்து வெளியே வந்ததைப் பார்த்த, பதிவெண் இல்லாத இரண்டு இரு சக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், நேசபிரபுவை விரட்டி சென்று அங்குள்ள பெட்ரோல் நிலையத்தில் வைத்து அரிவாள் உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாகத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில், படுகாயம் அடைந்த நேசபிரபு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக நேசபிரபு, மர்ம கும்பல் தன்னை நோட்டமிடுவதாகவும், அச்சுறுத்தல் இருப்பதாகவும் காமநாயக்கன் பாளையம் காவல் துறையினரிடம் கூறியும், காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர் தாக்கப்பட்ட நிகழ்விற்குக் கண்டனம் தெரிவித்து, செய்தியாளர் காவல்துறை அதிகாரியிடம் கதறிய ஆடியோவுடனான பதிவைத் தனது X சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நேசபிரபு காவல் துறையினரிடம் கூறும் போது, காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் தடுக்கப்பட்டிருக்கும் என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கை சங்கங்கள், ஊடகவியலாளர்கள் காவல் துறையினரின் அலட்சியத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், பத்திரிக்கையாளர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய கும்பலை உடனடியாக பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் உள்ள செய்தியாளர்கள், பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகக் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகம் முன்பு, கோயம்புத்தூர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும், முன்கூட்டியே நேசபிரபு காவல்துறையினருக்குத் தகவல் அளித்தும் அலட்சியமாக இருந்த காமநாயக்கன் பாளையம் காவலர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: திருப்பூரில் செய்தியாளருக்கு அரிவாள் வெட்டு.. தமிழக காவல்துறை மீது ஈபிஎஸ் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.