சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயிலின் வெப்ப அலையினால் பல நாட்களாக பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிப் போயிருந்தனர். இதற்கிடையே, வெயிலின் தாக்கத்தைப் போக்கும் விதமாக, கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது.
இதன்படி, தமிழ்நாட்டில் கடந்த 3 மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வரக்கூடிய நிலையில், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையைப் பொறுத்தவரையில், கடந்த 100 நாட்களுக்கும் மேலாக வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது.
இதனால் பிற்பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியே வராமல் வீட்டின் உள்ளே முடங்கினர். இந்நிலையில் தான் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. குறிப்பாக, கோயம்பேடு, அரும்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், கீழ்பாக்கம், பாடி மற்றும் தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திடீரென பெய்த மழையால் வாகன ஓட்டிகள் பலர் மழையில் நனைந்தவரே பயணம் செய்தனர்.
இதையும் படிங்க: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் எந்த படிப்பில் சேரலாம்? சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடியின் வழிகாட்டுதல்கள்!