ETV Bharat / state

மதுரை பி.பி.குளம் கண்மாய் ஆக்கிரமிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு! - MADURAI KANMAI ENCROACHMENT CASE

மதுரை பி.பி.குளம் முல்லை நகர் கண்மாயில் ஆக்கிரமிக்கப்பட்ட வீடுகளை அகற்றக்கூறி அரசு தரப்பில் ஒட்டப்பட்ட நோட்டீஸூக்கு தடை விதிக்க கோரி அப்பகுதி மக்கள் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 12, 2024, 2:19 PM IST

மதுரை: மதுரை மாநகர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி.பி.குளம் கண்மாயை ஒட்டிய பகுதியான முல்லைநகரில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் 3000 திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவு: இதில் குடிசை மாற்று வாரியத்தின் சார்பிலும் மாநகராட்சி சார்பிலும் ஏராளமான வீடுகள் வழங்கப்பட்டு அதிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பி.பி.குளம் கண்மாயில் அதிகளவு ஆக்கிரமிப்பு இருப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

உரிய பரிசீலனை செய்ய உத்தரவு: இந்த உத்தரவுகளை மறு சீராய்வு செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனுக்கள் 2022ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுக்களை விசாரணை செய்த நீதிமன்றம், “நீர்நிலை ஆக்கிரப்புகளை அகற்றுவதில் பாரபட்சம் காட்ட முடியாது எனக் கூறி இங்கு குடியிருப்பவர்களை மறு, குடி அமர்வு செய்வதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டும். மேலும் இந்த பகுதி மக்களின் கோரிக்கை மனுவை பெற்று அதன் அடிப்படையில் உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து இருந்தது.

பரிசீலனை செய்யாமல் காலி செய்ய சொல்லவதாக மனு: இந்நிலையில் இந்த பகுதி மக்களுக்கு மாற்று இடம் வழங்காமலும், இந்த பகுதி மக்கள் வழங்கிய மனுக்களை பரிசீலனை செய்யாமல் பொதுப்பணித்துறை வீடுகளை காலி செய்ய வேண்டும் என அனைத்து வீடுகளுக்கு முன் நோட்டீஸ் ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதே பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கும், குடிசை மாற்று வாரியம் சார்பாக வீடுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் அவர்களுக்கும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

நோட்டீஸிற்கு தடை விதிக்க மனு: இந்த நோட்டீஸிற்கு தடை விதிக்க வேண்டும் என பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் அனைத்தும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் உள்ள நீர்நிலை வழக்குகளை விசாரிக்க கூடிய நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன், நீதிபதி புகழேந்தி ஆகியோர் கொண்ட சிறப்பு அமர்வு முன் நேற்று (நவ.11) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் நீதிபதிகள் முன்பு பி.பி.குளம் கண்மாய் குறித்த வரைபடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பி.பி.குளம் கண்மாய் 23 ஏக்கர் பரப்பளவில் இருந்துள்ளது. தற்போது, ஆக்கிரமிப்புகளால் மூன்று ஏக்கர் கண்மாய் மட்டுமே உள்ளது. நீர்நிலை ஆக்கிரமிப்புகளை முற்றிலும் அகற்ற நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு மதுரை அருகே உள்ள ராஜாக்கூர் பகுதியில் 1500 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அதில் மாற்று இடம், அரசு மானிய விலையில் வழங்க தயாராக உள்ளோம்” என தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: போலி மருத்துவராக நாடகம்; கருக்கலைப்பு தம்பதியினர் சிக்கியது எப்படி?

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “ஏற்கனவே உயர் நீதிமன்றம் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு முன் சம்பந்தப்பட்ட மனுதாரர்களின் மனு மீது பரிசீலனை செய்ய வேண்டும் என்றும், அங்கு குடியிருப்போர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற உத்தரவை மீறி நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது ஏற்கத்தக்கது அல்ல” என தெரிவித்தனர்.

மேலும் “ராணுவ வீரர்கள் தங்கள் சொந்த பணத்தை கட்டி தான் வீட்டு வசதி வாரியத்திடம் இடம் வாங்கி வீடு கட்டி உள்ளனர். அவர்களுக்கு மாற்று இடம் வழங்கவில்லை. ராஜாக்கூர் பகுதியில் கட்டி உள்ள கட்டடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது அங்கு குடியிருக்க முடியாத சூழலை உள்ளது. ஆனால் அரசு தரப்பில் இதையெல்லாம் மறைத்து அறிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது,” என வாதிட்டனர் மேலும் வேறு மாற்று இடங்களை வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

“அந்தப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கு எவ்வாறு குடிசை மாற்று வாரியம் சார்பாக இடம் விற்பனை செய்யப்பட்டது இதற்கு யார் அனுமதி கொடுத்தது, விற்பனை செய்தது, யார் அரசு செய்த தவறுக்கு இவர்கள் என்ன செய்ய முடியும். எனவே அவர்களுக்கு ராஜாக்கூர் பகுதியில் இலவசமாகத் தான் வீடுகள் வழங்க வேண்டும் அது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும்,” மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், “மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் ராஜாக்கூர் கட்டடம் மோசமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அந்தக் கட்டடங்களில் நிலை என்ன என கேள்வி எழுப்பினர். மேலும் தற்போது அரசு சார்பாக கட்டப்படும் கட்டடங்கள் கட்டி சில மாதங்களிலே இடியும் நிலையில்தான் உள்ளது. இந்த கட்டடமானது பத்தாண்டுகளுக்காவது நீடிக்குமா என்றும் கேள்வி எழுப்பினார்கள். பின்னர் அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.