ETV Bharat / state

முதல்வர் நிவாரண நிதியிலிருந்து காளை முட்டி உயிரிழந்தவருக்கு ஏன் இழப்பீடு வழங்கக்கூடாது? - உயர் நீதிமன்றக்கிளை கேள்வி! - Madurai Bench

Madurai Bench: காளை முட்டி உயிரிழந்த மகனுக்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரிய வழக்கில், தேனி மாவட்ட ஆட்சியரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசுத் தரப்பிற்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

madurai-high-court-orders-theni-collector-to-explain-case-seeking-compensation-for-son-who-was-killed-by-bull
முதல்வர் நிவாரண நிதியிலிருந்து காளை முட்டி பலியான வாலிபருக்கு ஏன் இழப்பீடு வழங்கக்கூடாது - மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி..
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 14, 2024, 7:16 PM IST

மதுரை: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியைச் சேர்ந்த சங்கரேஸ்வரி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில், "என்னுடைய மூத்த மகனான முத்துமணிகண்டன், கடந்த ஆண்டு மார்ச் 12ஆம் தேதி தேனி மாவட்டம், அய்யம்பட்டியில் அரசின் உரிய அனுமதியுடன் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளையைக் கொண்டு சென்ற எங்கள் உறவினரான துளுக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜகுரு என்பவரின் வாகனத்தில், ஜல்லிக்கட்டு பார்ப்பதற்காகச் சென்றிருந்தான்.

அப்போது ஜல்லிக்கட்டு போட்டியைப் பார்த்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டபோது, வாகனத்தில் ஏறுவதற்காக நின்று கொண்டிருந்த நிலையில், ஜல்லிக்கட்டு காளை எனது மகனின் ஆணுறுப்பில் குத்தியதில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனின் உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, காளை முட்டி உயிரிழந்த எனது மகனுக்கு உரிய இழப்பீடு வழங்கும் வரை தேனி மாவட்டம், அய்யம்பட்டியில் அரசின் அனுமதி பெற்று நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், “ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர், காளை ஆகியவைகளுக்கு மட்டுமே காப்பீடு செய்யப்பட்டு இழப்பீடு வழங்கப்படும். இந்த வழக்கில் காளை உரிமையாளரின் உடன் வந்த இளைஞர் உயிரிழந்து உள்ளார். இவருக்கு காப்பீடு இல்லை. இழப்பீடு குறித்து மனுதாரர் ஏற்கனவே மனுத் தாக்கல் செய்து உள்ளார். வழக்கு விசாரணையில் உள்ளது” என கூறினார்.

இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ஜல்லிக்கட்டு நடத்துவது மாவட்ட நிர்வாகம்தான். எனவே, போட்டியில் பங்கேற்கும் காளை, காளை உரிமையாளர், மாடுபிடி வீரர்கள் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இருந்தாலும், ஜல்லிக்கட்டு பார்க்க காளையுடன் வந்த இளைஞர் உயிரிழந்து உள்ளார். எனவே, ஏதாவது ஒரு வகையில் இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து காளை முட்டி உயிரிழந்த இளைஞருக்கு ஏன் இழப்பீடு வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: "குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யும் வாகனங்களால் எந்தப் பயனும் இல்லை" - உயர்நீதிமன்ற மதுரை கிளை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.