ETV Bharat / state

“பனைமரத்தை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?” - தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு! - ban on cutting of palm trees - BAN ON CUTTING OF PALM TREES

Ban on Cutting of Palm Trees: தூத்துக்குடியில் பனை மரம் வெட்டுவதை தடுக்க போடப்பட்ட அரசாணையை முறையாகச் செயல்படுத்தக் கோரிய வழக்கில், பனை மரத்தை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai High Court (File Photo)
Madurai High Court (File Photo) (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 7, 2024, 6:56 PM IST

மதுரை: தூத்துக்குடியில் பனை மரம் வெட்டுவதைத் தடுக்க போடப்பட்ட அரசாணையை முறையாக செயல்படுத்தக் கோரிய வழக்கில், பனை மரத்தைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனை மரத்தை நம்பி ஏராளமான பனைத் தொழிலாளர்கள் உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பனங்கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற உணவுப் பொருட்கள் பிரபலமானது. இவை தமிழகம் மட்டும் அல்லாமல், இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. உடன்குடி பனங்கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, தற்போது அதிக அளவில் பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் மாநில மரமானது பனைமரம். சுற்றுச்சூழல் மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாக்க முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

பனைமரத்தை வெட்டுவதைத் தடுக்க 2021ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. பனை மரத்தை வெட்ட வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்றுதான் வெட்ட வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பனை மரங்களைப் பாதுகாக்க 2021ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், 2021ஆம் ஆண்டு அரசால் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட குழு இதுவரை பனைமரத்தைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழக அரசு விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: மக்களவைத் தேர்தல் 2024: திருச்சி கோட்டையை கைப்பற்றிய துரை வைகோ! - Lok Sabha Election Result 2024

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.