மதுரை: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கரோனா காலகட்டத்தில், கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர் தலைமையில் ஆய்வுக்குச் சென்றனர். அப்போது, சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோரை விசாரணைக்காக அழைத்துச் சென்று அடித்து துன்புறுத்தி கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காவலர் தாமஸ் பிரான்சிஸ் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இடைக்கால ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி நக்கீரன், காவலர் தாமஸ் பிரான்சிஸ்-க்கு ஜூலை 7ஆம் தேதி மாலை 4 மணி முதல் 11ஆம் தேதி மாலை 4 மணி வரை 4 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
இதையும் படிங்க: சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு; 3 மாதத்திற்குள் முடிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு!