ETV Bharat / state

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் வழக்கு: உயர் மட்டக்குழு அமைக்க மத்திய அரசுக்கு நீதிமன்றம் ஆணை - NLC WORKERS STRIKE CASE

என்எல்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஆறு மாதங்களில் உயர் மட்டக்குழு அமைக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

என்எல்சி மற்றும் சென்னை உயர் நீதிமன்றம்
என்எல்சி மற்றும் சென்னை உயர் நீதிமன்றம் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 7, 2024, 10:07 PM IST

சென்னை: பணி நிரந்தரம் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதை எதிர்த்து என்எல்சி நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்டவிரோத போரட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை நீதிபதி, நிர்வாகத்துக்கும், தொழிலாளர்களுக்கும் இடையிலான பிரச்னை தொடர்பான வழக்குகளை விசாரிக்க, தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நல நீதிமன்றங்கள் இருக்கும் போது, வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்கக்கோரி நேரடியாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுவை விசாரிக்க இயலாது என தெரிவித்தார்.

இதையும் படிங்க : என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு!

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய தொழிற் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள என்எல்சி நிர்வாகம் மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் இடையேயான பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், ஆறு மாதங்களில் உயர் மட்டக்குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டார்.

அந்தக் குழுவில், மத்திய தொழிலாளர் நலத்துறை மற்றும் நிலக்கரி அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இடம் பெற வேண்டுமெனவும் குறிப்பிட்டார். மேலும், என்எல்சி துணை பொது மேலாளர், கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளும் குழுவில் இடம் பெற வேண்டுமெனவும், நிலுவையில் உள்ள அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண உத்தரவிட்டு நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு
ஈடிவி பாரத் தமிழ்நாடு (Credits - ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.