ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மேல்முறையீடு வழக்கு; தீர்ப்பு ஒத்திவைப்பு! - Ex Minister Balakrishna Reddy

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 25, 2024, 8:01 PM IST

Ex AIADMK Minister Balakrishna Reddy: பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் கோப்புப்படம் (Credits - ETV Bharat Tamil Nadu)

சென்னை: கடந்த 1998ஆம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, முந்தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இவ்வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் 2019ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி தீர்ப்பளித்தது.

மூன்றாண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டதால், பாலகிருஷ்ண ரெட்டி பதவியை இழந்தார். சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்களை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜெயச்சந்திரன், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகத்துடன் சென்னை ஐஐடி புரிந்துணர்வு ஒப்பந்தம்.. எதற்காக தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.