சென்னை: அரக்கோணம் தொகுதியில் பாமக வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் பாலு தேர்தல் பிரச்சாரத்தின் போது, ராணிப்பேட்டையில் மலை போல் குவிந்து கிடக்கும், மக்கள் உயிரைக் குடிக்கும் குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுப்பேன் என தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன், கடந்த மே 7ஆம் தேதி ராணிப்பேட்டையில் உள்ள குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதிகாரிகள் தரப்பில் எந்த பதிலும் அளிக்காததால், குரோமியக் கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர், வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: ”தமிழ் என்றால் நீதி.. நீதி என்றால் தமிழ்” - உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கருத்து! - Madras High Court