சென்னை: விஷால் பிலிம் பேக்டரி படத் தயாரிப்பு நிறுவனத்திற்காகச் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய ரூ.21 கோடியே 29 லட்சம் கடனை, லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. அந்த தொகையைத் திருப்பிச் செலுத்தாத நடிகர் விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2021ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நீதிபதி பி.டிஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ரத்னம் படத்திற்காக நடிகர் விஷாலுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளமான ரூ.இரண்டு கோடியே 60 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த, ரத்னம் பட தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் (STONE BENCH FILMS) நிறுவனத்திற்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு, இன்று நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் கே.ஜி. திலகவதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், “ விஷால் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்க, லைகா நிறுவனத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை நாளை மறுநாளுக்கு (ஏப்ரல் 3) ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: +2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியது.. ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை வழங்கிய அறிவுரைகள் என்ன? - TN HSC BOARD EXAM