ETV Bharat / state

ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை இல்லை - சென்னை உயர் நீதிமன்றம்! - Formula 4 car race

Chennai Formula 4 Car Race: சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஃபார்முலா 4 கார் பந்தய கார்கள்
ஃபார்முலா 4 கார் பந்தய கார்கள் (Credits - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2024, 3:55 PM IST

Updated : Aug 29, 2024, 5:15 PM IST

சென்னை: நாளை மறுநாள் (ஆகஸ்ட் 31) மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை விதிக்கக் கோரி, தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கார் பந்தயம் நடத்தும் போது மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், எப்ஐஏ எனும் சர்வதேச அமைப்பு ஒப்புதல் பெறப்பட்டதா? மருத்துவமனைகளுக்கு இடையூறு இல்லாமல் மக்கள் செல்ல எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வில் இன்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுமக்கள் பாதுகாப்பு, இயல்பான போக்குவரத்து ஏற்பாடு, மருத்துவமனைகளுக்கு இடையூறு இல்லாமல் செல்வது உள்ளிட்டவற்றுக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசுத் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது, எப்ஐஏ சான்று குறித்து மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பினார். அதற்கு, சான்று இல்லாமல் பந்தயம் நடத்தப்பட மாட்டாது என அரசு தலைமை வழக்கறிஞர் உறுதி அளித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சான்று இல்லாமல் பந்தயம் நடத்தினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யலாம் என குறிப்பிட்டனர்.

அப்போது குறுக்கிட்ட தலைமை வழக்கறிஞர், பந்தயம் நடக்கும் தினத்தன்று காலையில் தான் எப்ஐஏ ஆய்வு செய்யும் என விளக்கமளித்தார். இதையடுத்து, எப்ஐஏ சான்று நகலை மனுதாரர் தரப்புக்கு வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கில் இன்று மாலை 4.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என அறிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை தீவுத்திடலைச் சுற்றி ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த தடை இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ஃபார்முலா 4 கார் பந்தயம்.. இரவே தெரியாமல் மாறும் சென்னை.. என்னென்ன ஏற்பாடுகள் தெரியுமா?

Last Updated : Aug 29, 2024, 5:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.