சென்னை: 18-ஆவது மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் இன்று(01.06.2024) வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக நடந்த 102 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தன. இதில் 72.02 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை திமுக தலைமையில் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இந்தியா கூட்டணி கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் இந்தத் தேர்தலிலும் பெரும் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் பணியாற்றினர்.
இதையும் படிங்க: தேர்தல் 2024: காங்கிரஸ் Vs பாஜக கூட்டணி; சிவகங்கை சீமையை கைப்பற்ற போவது யார்?
எதிரணியில் அதிமுக தலைமையில் தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளும், பாஜக தலைமையில் பட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகளும், நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்தும் களத்தில் உள்ளனர்.
கருத்துக்கணிப்பு முடிவுகள்: மக்களவைத் தேர்தல் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பல்வேறு நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன.
சர்வே நிறுவனம் | திமுக கூட்டணி | அதிமுக கூட்டணி | பாஜக கூட்டணி |
இந்தியா டுடே | 26 -30 | 6 - 8 | 1 -3 |
சிஎன்என் நியூஸ் 18 | 36 -39 | 2 | 1- 3 |
டிவி 9 | 35 | 0 | 4 |
ஏபிபி - சி வோட்டர் | 37-39 | 0 | 2 |
ஜன்கி பாத் | 34 | 1 | 5 |
இதையும் படிங்க: தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024, தருமபுரி தொகுதி: இருமுனைப் போட்டியில் வெல்லப் போவது யார்?