ETV Bharat / state

'அதிசயமே அசந்து போகும்'.. கண்களைக் கவரும் புதிய பாம்பன் ரயில் பாலம்.. சிறப்பம்சங்கள் என்னென்ன? - new pamban rail bridge

ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் மண்டபத்திலிருந்து பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்திற்கான பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ள நிலையில், கப்பல் செல்லும் பகுதியில் பாலம் ஏற்றி, இறக்கி சோதனை செய்யப்பட்டது. நவீன அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய பாலத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

பாம்பன் புதிய ரயில் பாலம்
பாம்பன் புதிய ரயில் பாலம் (credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2024, 4:15 PM IST

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில், மண்டபத்திலிருந்து பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலத்திற்கான பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துள்ளன. கப்பல் செல்லும் பகுதியில் பாலம் ஏற்றி, இறக்கி சோதனை செய்யப்பட்டது. இதற்காக செய்யப்பட்ட மின்னொளியில் ஜொலித்து காணப்பட்ட பாம்பன் பாலத்தின் சிறப்புகளைக் காணலாம்.

தீவுப் பகுதியான ராமேஸ்வரம், இந்தியாவின் புண்ணியத் தலங்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது. இதிகாசமான ராமாயணத்தோடு தொடர்புடையதாகக் கூறப்படும் ராமேஸ்வரம், ராமர், சீதை, அனுமன், லட்சுமணன் ஆகியோரோடு பின்னிப் பிணைந்துள்ளது. ஆகையால், இந்த புண்ணியத் தலத்திற்கு வருகை தரும் பக்தர்கள் ஒரு காலத்தில் மண்டபத்திலிருந்து படகு வாயிலாக பாம்பனைக் கடந்து சென்று ராமநாதசுவாமி கோயில், தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், ராமர்பாதம் ஆகிய முக்கிய தலங்களை தரிசித்து வந்தனர்.

புதியன் பாம்பன் ரயில் பாலத்தின் ட்ரோன் காட்சிகள் (Credits - ETV Bharat Tamil Nadu)

கடலின் நடுவே ரயில் பயணம்: இந்நிலையில், ஆங்கிலேயர் காலத்தில் 110 ஆண்டுகளுக்கு முன்பு மண்டபம் - ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் ரயில் பாலம் உருவாக்கப்பட்டது. இந்தப் பாலத்தின் வழியாக நடைபெற்ற போக்குவரத்தின் வாயிலாக சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் ராமேஸ்வரம் தீவு பெருமளவு வளர்ச்சி காணத் தொடங்கியது. அதற்குப் பிறகு சாலைப் போக்குவரத்திற்காக பாம்பனில் பாலம் கட்டப்பட்டு, கடந்த 1988-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. சாலைப் போக்குவரத்திற்காக தனிப் பாலம் உருவாக்கப்பட்டாலும், கடலின் நடுவே ரயிலில் பயணிக்கும் அனுபவம் என்பது சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் கிளர்ச்சியூட்டக்கூடியது என்பதால், ரயில் பயணமும் சிறப்பாக நடைபெற்று வந்தது.

பழைய பாலத்தால் பிரச்சினை: இந்நிலையில், நூற்றாண்டுகளைக் கடந்த ரயில் பாலம் கடல் காற்றின் காரணமாக, அடிக்கடி துருப்பிடித்து பழுதடைவதும், அதற்கான பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பதும் என பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வந்தது. அதுமட்டுமன்றி, கப்பல் போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்ட சேர்ந்து விரியும் வகையிலான (செர்ஷர் ஸ்பான்) அமைப்பில் அவ்வப்போது பழுது நேர்வதும், இதனால் ரயில் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதும் என பல்வேறு இடையூறுகள் இருந்து வந்தன.

மேலும், 2 கி.மீ நீளமுள்ள இந்தப் பாலத்தில், நிரந்தர வேகக்கட்டுப்பாட்டுக் கருவி உள்ளதால் ரயில்களை 10 கி.மீ. வேகத்தில்தான் இயக்க முடியும். இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டு புதிய ரயில் பாலத்தைக் கட்ட இந்திய ரயில்வே துறை முடிவு செய்து, இதற்கான பணிகளைத் துவங்க கடந்த 2019-ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. பாம்பன் புதிய பாலத்திற்கான பணிகள் முழுவதும் நிறைவடையும்போது ரூ.550 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்னொளியில் ஜொலிக்கும் புதிய பாலம்: இந்நிலையில், புதிய பாம்பன் பாலம் சுமார் 2.08 கி.மீ. தூரம் கடலில், பல்வேறு நவீன வசதிகளோடு உருவாக்கப்பட்டு ஏறக்குறைய பணிகள் முடிவடைந்து, தற்போது சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பாம்பன் புதிய ரயில் பாலத்தின் நடுவே கப்பல் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலம் ஏற்றி, இறக்கி சோதனை செய்யப்பட்டது. 72.5 மீ உயரம் செல்லும் வகையில் இந்தப் பாலத்தின் கர்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏறக்குறைய சாலைப் போக்குவரத்திற்காக அமைக்கப்பட்டுள்ள பாலத்திற்கு இணையான உயரமாகும். இதன் மூலம் கப்பல் போக்குவரத்து தடையின்றி நடைபெறும்.

புதிய பாம்பன் பாலத்தின் சிறப்பம்சங்கள்:

  1. இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கிப் பாலம் என்ற பெருமையைப் பெறுகிறது.
  2. புதிய பாம்பன் பாலம் கடலில் 6 ஆயிரத்து 790 அடி நீளத்தில் அமைகிறது.
  3. கடலின் குறுக்கே 100 வளைவுகளைக் கொண்டுள்ளது.
  4. 99 வளைவுகள் 18.3 மீட்ட உயரமும், நடுவிலுள்ள செங்குத்து தூக்கி வளைவு 72.5 மீட்டர் உயரமும் கொண்டுள்ளன.
  5. அருகிலுள்ள பழமையான ரயில் பாலத்தை விட 3 மீட்டர் உயரம் கொண்டது.
  6. எதிர்காலத்தில் இரட்டை ரயில் பாதை அமைக்கும் வகையிலான அடித்தளமும் கட்டமைப்பும் கொண்டுள்ளது.
  7. இந்த ரயில் பாதை ஆராய்ச்சி வடிவமைப்புகள் மற்றும் தரநிலைகள் அமைப்பால் (ஆர்டிஎஸ்ஓ) அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  8. இங்கு பயன்படுத்தப்படும் அனைத்து தளவாடப்பொருட்களும் ராமநாதபுரம் அருகிலுள்ள சத்திரக்குடி ரயில் நிலையத்தில் இதற்கென்று அமைக்கப்பட்ட பட்டறையிலிருந்து தயாரிக்கப்பட்டதாகும்.
  9. கப்பல் போக்குவரத்து எளிதாக நடைபெறும் வகையில், முழு தானியங்கி அமைப்பில் எலக்ட்ரோ-மெக்கானிக்கல் சிஸ்டம் மூலமாக 17 மீட்டருக்கு உயர்த்தும் வகையில் வடிவமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் மற்றுமொரு அடையாளமாகவும், நடுக்கடலில் அமைக்கப்பட்ட ரயில் பாலம் என்ற அடிப்படையில் இதன் நவீன வசதி மற்றொரு அதிசயமாகவும் திகழவுள்ளது. இங்கு அடுத்த சில வாரங்களில் ரயில் போக்குவரத்து துவங்கும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.